கெர்லென் ஆறு

கெர்லென் (கெருலென்; மொங்கோலியம்: Хэрлэн гол; சீனம்: 克鲁伦河பின்யின்: கெலுலுன் ஹே) என்பது மங்கோலியா மற்றும் சீனாவில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இதன் நீளம் 1,254 கி.மீ. ஆகும்.[1]

கெர்லென் ஆறு (Хэрлэн гол)
克鲁伦河 (Kèlǔlún hé)
ஆறு
ஒன்டோர்கானுக்கு அருகில்
பெயர் மூலம்: மொங்கோலியம்: கெர்லென், "படர் கொடிகளால் சூழப்பட்ட"
நாடுகள் மங்கோலியா, சீன மக்கள் குடியரசு
மங்கோலிய ஐமக்குகள் கென்டீ மாகாணம், டோர்னோட் மாகாணம்
சீன மாகாணம் உள் மங்கோலியா
சீன மாவட்டம் ஹுலுன்புயிர்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் புர்கான் கல்துன், கென்டீ மலைகள்
கழிமுகம் ஹுலுன் ஏரி
நீளம் 1,254 கிமீ (779 மைல்)

நீரோட்டம்

தொகு

இது கென்டீ மலைத்தொடரின் தெற்குப் பகுதி சரிவுகளில் புர்கான் கல்துன் மலைக்கு அருகில் உருவாகிறது. இது கான் கென்டீ பாதுகாக்கப்பட்ட பகுதியில் உலான் பத்தூருக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1] இப்பகுதி ஆர்க்டிக் (தூல் ஆறு) மற்றும் அமைதி (கெர்லென், ஆனன்) வடிநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். இது மூன்று ஆற்றுப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

இங்கிருந்து கெர்லென் பெரும்பாலும் கிழக்கே, கென்டீ ஐமக்கின் வழியே பாய்கிறது. குறிப்பிட்ட தூரத்திற்குப் பின்னர் இது கிழக்கு மங்கோலியப் புல்வெளியைக் கடக்கிறது. ஆள்கூற்று 48°3′N 115°36′E / 48.050°N 115.600°E / 48.050; 115.600ல் சீனாவிற்குள் நுழைகிறது. 164 கி.மீ.க்குப் பின் ஹுலுன் ஏரியில் கலக்கிறது.

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 Brutsaert, Wilfried; Sugita, Michiaki (December 2008). "Is Mongolia's groundwater increasing or decreasing? The case of the Kherlen River basin". Hydrological Sciences Journal (London: Taylor & Francis Informa Ltd) 53 (6): 1221–1229. doi:10.1623/hysj.53.6.1221. https://zenodo.org/record/896803. பார்த்த நாள்: 19 January 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்லென்_ஆறு&oldid=2450563" இலிருந்து மீள்விக்கப்பட்டது