கெல்லீஸ் கோட்டையகம்
கெல்லீஸ் காசல் (Kellie's Castle அல்லது Kellie's Folly) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தின், கிந்தா மாவட்டத்தின் பத்து காஜாவில் உள்ள ஓர் அரண்மனை ஆகும். வேலை முடிவுபெறாத, பாழடைந்த மாளிகையானது, இசுக்கொட்லாந்து பண்ணையரான வில்லியம் கெல்லி-ஸ்மித் என்பவரால் கட்டப்பட்டது.
கெல்லீஸ் காசல் Kellie's Castle | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | மூரிஷ் மறுமலர்ச்சி / இந்தோ-சாராசெனிக் |
நகரம் | பத்து காஜா |
நாடு | மலேசியா |
கட்டுமான ஆரம்பம் | 1915 |
நிறைவுற்றது | கட்டுமானம் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாக 1926-இல் பணிகள் நிறுத்தப்பட்டன |
கட்டுவித்தவர் | வில்லியம் கெல்லி-ஸ்மித் |
இதனைத் தன் மனைவிக்கு அன்புப் பரிசாக அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் காலமானதால், நிறைவுறாமல் நிற்கிறது.[1] கெல்லியின் அரண்மனையானது ராயா ஆறு (சுங்கை ராயா) அருகே அமைந்துள்ளது.
பின்னணி
தொகுவில்லியம் கெல்லி ஸ்மித் (1870-1926) [2] 1870 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் மொராய் ஃபிர்த், கெல்லாஸில் பிறந்தார். 1890 ஆம் ஆண்டு, தன் 20 ஆம் வயதில் மலேசியாவுக்கு கட்டடப் பொறியாளராக வந்தார்.
அங்கு அவர் சார்லஸ் ஆல்மா பேக்கரின் சர்வே நிறுவனத்தில் சேர்ந்தார், அவர் பேருக் கஜாக், பேராக் மாநிலத்தில் 9000 ஹெக்டேர் காடுகளை அழிக்க மாநில அரசுகளிலிருந்து சலுகைகளை பெற்றார். பேக்கருடன் தனது தொழில் முனைப்பினால் பெற்ற கணிசமான இலாபத்தைக் கொண்டு, ஸ்மித் கிந்தா மாவட்டத்தில் 1,000 ஏக்கர் (405 ஹெக்டர்) காட்டில் நிலத்தை வாங்கி, ரப்பர் தோட்டத்தை உருவாக்கியும், வெள்ளீய சுரங்கத் தொழிலிலும் இறங்கினார்.
கெல்லீஸ் தனது ஸ்காட்டிஷ் காதலியான, ஆக்னசை திருமணம் செய்து கொண்டு, 1903 ஆம் ஆண்டு மலாயாவிற்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு அடுத்த ஆண்டே ஹெலன் என்ற மகள் பிறந்தாள்.
1909 ஆம் ஆண்டில் ஸ்மித் தனது முதல் மாளிகையாக "கெல்லாஸ் ஹவுஸ்." என்ற மாளிகையைக் கட்டினார், இது 1911 செப்டம்பர் 15 அன்று லண்டன் நிதியியல் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.[சான்று தேவை][சான்று தேவை]
வரலாறு
தொகு1915 இல், அவரது மகன் ஆண்டனி பிறந்ததபிறகு ஸ்மித், தமிழக கட்டிடக் கலையை பின்னணியாகக் கொண்டு பெரிய அரண்மனையைக் கட்ட ஸ்மித் திட்டமிட்டார். தமிழகக் கட்டிடக் கலையில் அரண்மனையைக் கட்ட தமிழக கட்டிடக் கலைஞர்கள் 70 பேரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றார்.
கட்டடத்துக்கு தேவைப்பட்ட செங்கல்லையும் மணல், பளிங்கு போன்றவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து 1890-களில் இந்த அரண்மனையைக் கட்டது தொடங்கினார். இதை ஆறுமாடி கட்டடமாக கட்ட திட்டமிட்டு, உள் டென்னீஸ் விளையாட்டு அரங்கம் போன்றவற்றுடன் கட்டத் தொடங்கினார்.
கட்டடப் பணியின்போது பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை, இன்ஃப்ளூ கடுமையாகத் தாக்கியது. இதனால் அருகே ஒரு கோவில் கட்டுவதற்கு தொழிலாளர்கள் அவரை அணுகியபோது, ஸ்மித் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
அவரது பெருந்தன்மைக்கு நன்றி காட்டும் விதமாக, அவர்கள் கட்டிய முருகன் கோவில் சுவரில் மற்ற தெய்வங்களுக்கு அருகில் அவருக்கும் ஒரு சிலை அமைக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து கோவிலுக்கு ஒரு சுரங்கப்பாதை கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.[சான்று தேவை] (மாளிகை வேலைக்குச் சென்ற தமிழ்த் தொழிலாளர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இன்னும் அருகில் வசிக்கிறார்கள்.)[சான்று தேவை]
1926 இல் போர்த்துக்கல், லிஸ்பனுக்கு பயணம் மேற்கொண்ட போது, 56 வயதில் வில்லியம் கெல்லி ஸ்மித் இறந்தார். இதனால் பெருந்துயருக்கு ஆளான வில்லியமின் மனைவி ஸ்காட்லாந்துக்குச் சென்றுவிட முடிவு செய்தார்; கோட்டையின் கட்டுமானம் தமிழ்த் தொழிலாளர்களால் முடிக்கப்படாத நிலையிலேயே இருந்தது. இறுதியில், "கெல்லிஸ் ஃபோலி" அல்லது "கெல்லியின் கோட்டை" என்று அழைக்கப்பட்ட கெல்லாஸ் ஹவுஸ், ஹாரிஸன்ஸ் மற்றும் க்ரோஸ்பீல்டு என்ற பிரித்தானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
கெல்லியின் கோட்டை இன்று
தொகுகெல்லியின் மாளிகை தற்போது ஒரு பிரபலமான உள்ளூர் சுற்றுலா தலமாக உள்ளது, சிலர் அதை பேய் மாளிகை என்று நம்புகின்றனர்.
இங்கு 1999 ஆண்டில் அன்னா அன்ட் த கிங் மற்றும் 2000 ஆம் ஆண்டு ஸ்கைலைன் க்ரூசர்ஸ் ஆகிய படங்கள் எடுக்கப்பட்டன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ம.மோகன் (7 பெப்ரவரி 2018). "படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் 'பேராக்'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Tak Ming, Ho (2005). Generations - The story of Batu Gajah. MPH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 98340556 5 X.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - ↑ Thiedeman, Roger (3 December 2000).
வெளி இணைப்புகள்
தொகு- Tourism Malaysia - Kellie's Castle பரணிடப்பட்டது 2018-03-24 at the வந்தவழி இயந்திரம்
- Kellie's Castle, Perak பரணிடப்பட்டது 2017-07-01 at the வந்தவழி இயந்திரம் at Journey Malaysia
- Cameron Highlands Malaysia - Kellie's Castle
- A documentary video about Kellies Castle at TourMalaysia.com
- Kellies Castle பரணிடப்பட்டது 2017-07-29 at the வந்தவழி இயந்திரம் at TraveltoPerak.com