கேசவரெட்டி
கேசவரெட்டி (ஆங்கிலம்: Kesava Reddy, தெலுங்கு: పి కేశవ రెడ్డి ) என்பவர் நன்கறியப்பட்ட தெலுங்கு நாவல் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் ஆந்திரமாநிலத்தில் பிறந்தவர். இந்தியாவின் முக்கிய சமூகப்பிரச்சினைகளான வறுமை, சமத்துவம் இன்மை, மக்களிடையே பரவலாக உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி தன் எழுத்துக்களில் பேசினார். சமூகப்பொறுப்புகளின்பால் மக்களை உந்தித் தள்ளினார். இவர் கருத்து வாதங்களையும் பிரபல தெலுங்கு இலக்கிய உத்திகளையும் வெற்றிகரமாகத் தன் படைப்புகளில் இணைத்தார்.
கேசவரெட்டி | |
---|---|
பிறப்பு | Thalapula Palli, சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | 10 மார்ச்சு 1946
இறப்பு | 13 பெப்ரவரி 2015 நிசாமாபாத் (தெலுங்கானா) | (அகவை 68)
தொழில் | எழுத்தாளர் மற்றும் மருத்துவர் |
தேசியம் | இந்தியன் |
காலம் | 1970–2015 |
வகை | அபுனைவு |
துணைவர் | தீராமதி |
பிள்ளைகள் | 2 |
வாழ்க்கை
தொகுகேசவரெட்டி ஆந்திரமாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தாளப்புள பள்ளி என்ற கிராமத்தில் ரங்கா ரெட்டி என்ற விவசாயிக்கு மகனாகப்பிறந்தார். தன் ஆரம்ப காலக் கல்வியை திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பயின்றார். இளநிலை மருத்துவப்படிப்பினை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்றார். தோல் நோய் தொடர்பான முதுகலைப்படிப்பினை கிருத்துவ மருத்துவக்கல்லூரியிலும் பயின்றார்.
மருத்துவப்பணி
தொகுநிஜமாபாத் தீச்சா பள்ளி விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றினார். 2015 ல் தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத் நகரத்தில் இயற்கை எய்தினார்.
படைப்புகள்
தொகுஇவரின் நாவல்கள் கீழே பட்டியலில் உள்ளன
ஆண்டு | தலைப்பு | மொழி | விருதுகள் |
---|---|---|---|
1975 | பணிசாலு - பகவானுவாச்சா - 2 நெடுங்கதைகள் ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. | தெலுங்கு | |
1979 | குஸ்ர தேவதை | தெலுங்கு | |
1979 | சமாசாணம் துண்ணீரு | தெலுங்கு | |
1980 | அதாடு அடவினி ஜெயிச்சாடு | தெலுங்கு | |
1982 | இராமுடு நாடு ராஜ்யமுண்டாடி | தெலுங்கு | |
1982 | அழகு நகரம் | தெலுங்கு | |
1996 | மொகவானி பிள்ளன கொருகி | தெலுங்கு | |
1996 | சிவாரி குடைஸ் | தெலுங்கு | |
2008 | முனியம்மா | தெலுங்கு | |
2013 | மொகவானி பிள்ளன கொருவி: ஒன்டிலுவின் பலாடு | ஆங்கிலம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: K to Navalram. சாகித்திய அகாதமி. p. 2738.