கேசவானந்த பாரதி
சுவாமி கேசவானந்த பாரதி (Shri Kesavananda Bharati) (9 டிசம்பர் 1940 – 6 செப்டம்பர் 2020) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்நீர் மடாதிபதியும், சமூக ஆர்வலரும் ஆவார்.[1][2]
சிறீ கேசவானந்த பாரதி | |
---|---|
அக்டோபர் 2009-இல் கேசவானந்த பாரதி சுவாமிகள் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு விஜயம் செய்த போது எடுத்த புகைப்படம் | |
பிறப்பு | 9 டிசம்பர் 1940 |
இறப்பு | 6 செப்டம்பர் 2020 (வயது 79) மங்களூர், கர்நாடகா இந்தியா |
சமயம் | இந்து |
Sect associated | எட்நீர் மடம், காசர்கோடு மாவட்டம், கேரளா, இந்தியா |
தத்துவம் | அத்வைதம் |
குரு | சுவாமி ஈஸ்வரானந்த பாரதி |
எட்நீர் மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை கேரளா அரசு கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித சொத்துரிமைக்கு எதிராக செயல்பட்ட கேரளா அரசுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கேசவாநந்த பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றங்களோ தலையிட உரிமை இல்லை என வரலாற்று முக்கியமான தீர்ப்பு வழங்கியது.[3][4]
கேசவானந்த பாரதி சுவாமிகள் முதுமை நோய் காரணமாக மங்களூரு மருத்துவமனையில் தமது 79-வது வயதில் 6 செப்டம்பர் 2020 அன்று மறைந்தார்.[5][6][7][8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Edneer Mutt, Kasaragod, Kerala, India – Kerala Tourism". www.keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
- ↑ "Daijiworld – A News portal linking West coast of India and the World". www.daijiworld.com. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Livemint (5 May 2013). "A landmark verdict revisited". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
- ↑ "Seer Kesavananda Bharati, hailed as Constitution's saviour, dies". Hindustan Times (in ஆங்கிலம்). 6 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
- ↑ எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி சுவாமி கேசவானந்த பாரதி காலமானார்
- ↑ Kesavananda Bharati, whose petition led to landmark verdict on Constitution, dies at 79
- ↑ Hindu seer Kesavananda Bharati, who ensured basic structure of Constitution cannot be altered, dies
- ↑ Kesavananda Bharati Swamiji of Edneer Mutt passes away