கேசவ மகிந்திரா

இந்திய தொழிலதிபர்

கேசவ மகிந்திரா (Keshub Mahindra) (பிறப்பு: அக்டோபர் 9, 1923) இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், மகிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமாவார். ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக குழுவின் தலைவராக இருந்த இவர், ஆகத்து 2012 இல் ஓய்வு பெற்றார். இந்த பதவியை தனது மருமகன் ஆனந்த் மகிந்திராவிடம் ஒப்படைத்தார். [1] இவர் தனது தொண்டுக் காரியங்களுக்கு பெயர் பெற்றவர். [2] அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டனில் பட்டம் பெற்ற பின்னர், 1947 இல் மகிந்திரா அண்டு மகிந்திராவில் சேர்ந்தார். பின்னர், 1963 இல் தலைவராக பொறுப்பேற்றார்.

கேசவ மகிந்திரா
பிறப்புகேசவ மகிந்திரா
9 அக்டோபர் 1923 (1923-10-09) (அகவை 101)
தேசியம்இந்தியன்
கல்விவார்ட்டன், பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
பணிதொழிலதிபர்
சொந்த ஊர்மும்பை, இந்தியா
பட்டம் மகிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர்
பதவிக்காலம்1963 – 2012
பிள்ளைகள்3
வலைத்தளம்
www.mahindra.com/about-us/leaders

நிறுவனங்களும், குழுக்களும்

தொகு

தொழில் நிறுவனச்சட்டம், ஏகபோகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் தொடர்பான சச்சார் குழு, மத்திய தொழில் ஆலோசனைக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பணியாற்ற இந்திய அரசால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். [3] 1987 ஆம் ஆண்டில், இவருக்கு பிரான்சு அரசாங்கத்தால் செவாலியே விருது வழங்கப்பட்டது. [4] 2004 முதல் 2010 வரை, புது தில்லியில் வர்த்தக மற்றும் தொழில் தொடர்பான பிரதமரின் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இவர் இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் உச்ச ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் இந்திய முதலாளிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். புதுடெல்லியின் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் கௌரவ சக உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஐக்கிய உலக கல்லூரிகளின் அமைப்பின் (சர்வதேச) உறுப்பினராகவும் உள்ளார். [4]

இவர் நல்லாட்சி மற்றும் நெறிமுறைகளின் ஆதரவாளராக உள்ளார். ஆர்வர்டு வைணக்ப் பள்ளியில் வளர்ந்து வரும் சந்தைகளை உருவாக்குதல் திட்டத்திற்கான நேர்காணலில் உட்பட பல வெளியீடுகள் மற்றும் மன்றங்களில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதீ இவர் உலகளாவிய வணிகக் குழுவில் குழுவின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசுகிறார். உயர்ந்த நெறிமுறை விழுமியங்களில் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என்பது இவரது உறுதிப்பாடாகும். [5]

சர்ச்சை

தொகு

1984 ஆம் ஆண்டில் விசவாயுச் சம்பவம் நடந்த நேரத்தில் யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகமற்ற தலைவராக இவர் பணியாற்றி வந்தார். இதில் போபாலில் 3,787 பேர் இறந்தனர் ( மத்திய பிரதேச அரசின் கணக்கின்படி). சூன் 2010 இல், யூனியன் கார்பைடு துணை நிறுவனத்தின் ஏழு முன்னாள் ஊழியர்கள், எழுபது வயதைக் கடந்த அனைத்து இந்திய ஊழியர்களும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 100,000 ($ 1,636). [6] அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் பிணை வழங்கப்பட்டது. [7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Keshub Mahindra retires as Mahindra & Mahindra Chairman, Anand Mahindra takes over". Economictimes.indiatimes.com. 9 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.
  2. "Keshub Mahindra's Rich Legacy Continues". Forbes India. 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.
  3. "Archived copy". Archived from the original on 5 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. 4.0 4.1 "Frost & Sullivan :: Keshub Mahindra". 2.frost.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Interview with Keshub Mahindra". Creating Emerging Markets. Harvard Business School. Archived from the original on 2016-12-28. பார்க்கப்பட்ட நாள் 2020-09-12.
  6. "Keshub Mahindra, six others get two-year jail for Bhopal tragedy". http://www.thehindu.com/news/national/keshub-mahindra-6-others-get-2year-jail-for-bhopal-tragedy/article448748.ece. 
  7. "bhopal: Keshub Mahindra, seven others convicted in Bhopal gas case - The Economic Times". Articles.economictimes.indiatimes.com. 2010-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவ_மகிந்திரா&oldid=3582809" இலிருந்து மீள்விக்கப்பட்டது