மகிந்திரா அண்டு மகிந்திரா

மகிந்திரா அண்டு மகிந்திரா(முபச500520 ) (அ) மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா (Mahindra & Mahindra Limited) மகாராட்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இந்தக் குழுமம் விண்வெளி, வேளாண் வணிகம், சந்தைக்குப்பிறகான வர்த்தகம், வாகன உற்பத்தி, வாகன் உதிரி பாகங்கள், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, பண்ணை உபகரணங்கள், நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல், தளவாடங்கள், அசையாச் சொத்து வணிகம், சில்லறை விற்பனை, பயணியர் வாகனங்கள், தானுந்துகள், இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் உழவு இயந்திரங்களில் சந்தைத் தலைமையுடன் இது மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம்
வகைபொது (முபச500520 )
நிறுவுகை1945
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தொழில்துறைவாகன தொழில்துறை
விவசாய இயந்திரங்கள்
வருமானம் 23,803.24 கோடி
(US$3.12 பில்லியன்)
(2011).[1]
நிகர வருமானம் 2,871.49 கோடி
(US$376.45 மில்லியன்)
(2010).[2]
பணியாளர்119,900 [2]
தாய் நிறுவனம்மகேந்திரா குழு
இணையத்தளம்Mahindra.com

மேலும் பிரெஞ்சு நாட்டு தானுந்து நிறுவனமான ரெனோ(Renault [1])வின் தயாரிப்பான லோகன் என்ற மகிழ்வுந்தை இந்தியாவில் விற்பனை முகவராக இருந்து விற்பனை செய்து வருகிறது.

மேற்கோள்கள்தொகு