கேசுதிகிலியோன்
கேசுதிகிலியோன் (Castiglione township; இத்தாலியம்: Comune di Castiù (Castiglione delle Stiviere)) என்பது இத்தாலியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரியம் ஆகும். இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள, லோம்பார்டி நிருவாக மண்டலத்தின் கீழ்வரும் மேன்டுவா மாகாணத்தில் இருக்கிறது.
Castiglione delle Stiviere கேசுதிகிலியோன் | |
---|---|
ஆள்கூறுகள்: 45°26′N 12°19′E / 45.433°N 12.317°E | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | லோம்பார்டி |
மாகாணம் | மேன்டுவா மாகாணம் |
நகரியம் | கேசுதிகிலியோன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 42 km2 (16 sq mi) |
மக்கள்தொகை (ஜனவரி 1, 2004) | |
• மொத்தம் | 20,775 |
• அடர்த்தி | 646/km2 (1,670/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 |
இணையதளம் | www.comune.venezia.it |
வீரமாமுனிவர் பிறந்த இடம்
தொகுகாஸ்திலியோனே தெல்லே ஸ்டிவியரே என்னும் இடத்தில்தான் தலைசிறந்த தமிழறிஞராகிய வீரமாமுனிவர் பிறந்தார். அவரது இயற்பெயர் கொஸ்தான்சோ ஜுசேப்பே எவுசேபியோ பெஸ்கி (Costanzo Giuseppe Eusebio Beschi). அவர் பிறந்த நாள் 1680, நவம்பர் 8. வீரமாமுனிவர் பிறந்த 300ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் காஸ்திலியோனே நகரில் 1980இல் நிகழ்ந்தது. தம் மண்ணில் பிறந்து வளர்ந்த ஒருவர் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கே மறைப்பணி ஆற்றியதோடு தலைசிறந்த மொழிப்பணியும் ஆற்றி உலகப்புகழ் பெற்றதை காஸ்திலியோனே மக்கள் சிறப்பித்தார்கள். அவருடைய நினைவாக பதக்கம் வெளியிடப்பட்டது. அவர் நினைவைக் கொண்டாடும் விதத்தில் அவருக்குச் சிலையொன்றும் எழுப்பப்பட்டது. குறிப்பாக, வீரமாமுனிவருக்கு "தமிழ் மொழியின் தாந்தே" (Il Dante della lingua Tamil) என்னும் பட்டமளித்து ஊர்மக்கள் சிறப்பித்தனர்.
இத்தாலி நாட்டில் Divina Commedia (தெய்வீக இன்பிலக்கியம்) என்னும் தலைசிறந்த நெடும்பாடலை இயற்றி அழியாப் புகழ் பெற்றவர் தாந்தே அலிகியேரி (Dante Alighieri) என்னும் புலவர். அவரைப் போன்று, அவருடைய இலக்கியப் பாணியை அடியொற்றி, வீரமாமுனிவரும் தேம்பாவணி என்னும் தீஞ்சுவைக் காவியத்தை ஆக்கினார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், அகராதி, உரைநடை போன்ற படைப்புகளோடு பரமார்த்த குருவின் கதை போன்ற நகைச்சுவை இலக்கியத்தையும் ஆக்கிய வீரமாமுனிவரைத் தமிழுக்குத் தாம் அளித்தமை பற்றி காஸ்திலியோனே மக்கள் பெருமைப்படுகின்றனர்.