கேத்தரின் எந்தெரெபா
கேத்தரின் நயம்புரா எந்தெரெபா [1] (பிறப்பு: 1972 சூலை 21) இவர் கென்ய மராத்தான் ஓட்டப்பந்தய வீரராவார் . உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டு முறை மராத்தானில் வென்றுள்ளார். 2004, 2008 ஆம் ஆண்டுகளில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் பாஸ்டன் மராத்தானில் நான்கு முறை வென்றுள்ளார். இவர்2001 ஆம் ஆண்டில் நடந்த சிகாகோ மராத்தானில் 2:18:47 நேரத்தில் ஓடி மகளிர் மராத்தான் உலக சாதனையை முறியடித்தார் .
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
2007 உலகத் தடகளப் போட்டியில் எந்தெரெபா. | ||
நாடு கென்யா | ||
மகளிருக்கான தடகளம் | ||
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
2004 ஏதென்ஸ் | மராத்தான் | |
2008 பெய்ஜிங் | மராத்தான் | |
உலகப்போட்டிகள் | ||
2003 பாரிஸ் | மராத்தான் | |
2007 ஒசாக்கா | மராத்தான் | |
2005 எல்சிங்கி | மராத்தான் | |
முக்கிய உலக மராத்தான் | ||
2006 நியூயார்க்கு நகரம் | மராத்தான் | |
2005 பாஸ்டன் | மராத்தான் | |
2004 பாஸ்டன் | மராத்தான் | |
2003 நியூயார்க்கு நகரம் | மராத்தான் | |
2003 இலண்டன் | மராத்தான் | |
2002 சிகாகோ | மராத்தான் | |
2002 பாஸ்டன் | மராத்தான் | |
2001 சிகாகோ | மராத்தான் | |
2001 பாஸ்டன் | மராத்தான் | |
2000 சிகாகோ | மராத்தான் | |
2000 பாஸ்டன் | மராத்தான் | |
1998 நியூயார்க்கு நகரம் | மராத்தான் |
2008 ஆம் ஆண்டில், சிகாகோ ட்ரிப்யூன் என்ற இதழில்விளையாட்டு எழுத்தாளர் பிலிப் ஹெர்ஷ் என்பவரால் இவர், எல்லா காலத்திலும் சிறந்த மகளிர் மராத்தான் வீரராக வகைப்படுத்தப்பட்டார். [2]
தொழில்
தொகுஇவர் நெய்ரி மாவட்டத்தில் உள்ள கத்துங்காவைச் சேர்ந்தவர்., [3] நொகோரானோ மேல்நிலைப் பள்ளியில் படித்தப் பின்னர், இவர் தனது தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். 1994 ஆம் ஆண்டில், கென்யா சிறைச்சாலை சேவையால் அதன் தடகள திட்டத்தில் இவர் சேர்க்கப்பட்டார். [4] இவருக்கு 2004, 2005 ஆம் ஆண்டுகளின் கென்ய விளையாட்டு வீரர் விருதுகள் வழங்கப்பட்டன. [5] 2005 ஆம் ஆண்டில் அதிபர் மவாய் கிபாக்கியால் இவருக்கு ஆர்டர் ஆஃப் தி கோல்டன் வாரியர் பட்டம் வழங்கப்பட்டது. [6]
2009 இலண்டன் மராத்தானில் இவர் ஏழாவது இடத்தைப் பிடித்தார். இது கேத்தரின் டோரேவின் 21 துணை -2: 30 மணிநேர மராத்தான்களின் சாதனையை சமன் செய்தது. [7] அந்த ஆண்டின் பிற்பகுதியில் யோகோகாமா மகளிர் மராத்தானில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2:29:13 மணிநேரத்தில் இந்த தூரத்தைக் கடந்தார். [8] பெய்ஜிங் மராத்தானில் மூன்றாவது இடத்திற்கு 2:30:14 மணிநேரத்தில் இவர் எல்லையைத் தாண்டிய அக்டோபர் 2011 வரை அவர் மற்றொரு மராத்தான் பந்தயத்தை முடிக்கவில்லை. [9]
"கேத்தரின் தி கிரேட்" என்று அழைக்கப்படும் இவர், [10] நைரோபியில் தனது கணவர் அந்தோணி மைனாவுடனும் மகள் ஜேன் ஆகியோருடன் வசிக்கிறார். [11] இவரது சகோதரர் சாமுவேல், சகோதரி அனஸ்தேசியா ஆகியோரும் மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் ஆவர். [12]
நூலியல்
தொகு- Catherine Ndereba: The Marathon Queen, by Ng’ang’a Mbugua. Sasa Sema Publications, 2008[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wincatherine Nyambura Ndereba - Olympics Athletes - 2008 Summer Olympics - Beijing, China - ESPN". sports.espn.go.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.
- ↑ Chicago Tribune, 8 October 2008: Ranking the Top 10 women marathoners
- ↑ Catherine Ndereba. Sports Reference. Retrieved on 17 October 2011.
- ↑ The Standard, 28 October 2007: Catherine Ndereba: Racing to conquer the world
- ↑ IAAF, 2 March 2006: Athletes dominate Kenyan Sports Awards
- ↑ 6.0 6.1 Daily Nation, Lifestyle Magazine, 15 November 2008: Fitting tribute to Marathon Queen பரணிடப்பட்டது 2011-07-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ IAAF, 27 April 2009: Ndereba matches Dorre’s record total of 21 sub-2:30 marathons பரணிடப்பட்டது 2009-05-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Catherine Ndereba. Marathon Info. Retrieved on 17 October 2011.
- ↑ Jalava, Mirko (16 October 2011). Kiprop and Wei Xiaojie triumph in Beijing. IAAF. Retrieved on 17 October 2011.
- ↑ Marathon Great Catherine Ndereba Retires. Runner's World (2014-05-28). Retrieved 2020-05-25.
- ↑ Hersh, Philip (2002-10-10). World record-holder Catherine Ndereba trains with her husband and sister, but it's her 5-year-old daughter who best motivates mom. Chicago Tribune. Retrieved 2020-05-25.
- ↑ Catherine Ndereba. Time. Retrieved 2020-05-25.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் கேத்தரின் எந்தெரெபா-இன் குறிப்புப் பக்கம்
- "Catherine Ndereba" பரணிடப்பட்டது 2009-05-08 at the வந்தவழி இயந்திரம், n°38 on Time’s list of "100 Olympic Athletes To Watch"
- "Catherine Ndereba" documentary project
- Famous People from Kenya