கேந்திராபடா

கேந்திரபாரா (Kendrapara), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கேந்திராபடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடகிழக்கே 85.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மகாநதியின் கிளை ஆறான சித்திரோப்தலா ஆறு கேந்த்திரபாரா மாவட்டத்தில் பாய்கிறது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.

கேந்திராபடா
କେନ୍ଦ୍ରାପଡ଼ା
துளசி சேத்திரம்[1]
நகரம்
கேந்திரபரா
கேந்திராபடா is located in ஒடிசா
கேந்திராபடா
கேந்திராபடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்திராபடா நகரத்தின் அமைவிடம்
கேந்திராபடா is located in இந்தியா
கேந்திராபடா
கேந்திராபடா
கேந்திராபடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°30′N 86°25′E / 20.50°N 86.42°E / 20.50; 86.42
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கேந்திராபடா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கேந்திராபடா நகராட்சி
 • பரப்பளவு தரவரிசை29
ஏற்றம்
13 m (43 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்47,006
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
754211
இடக் குறியீடு6727[2]
வாகனப் பதிவுOD 29
இணையதளம்kendrapara.nic.in
ராஜகனிகா அரண்மனை, கேந்திரபாரா

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 8,892 வீடுகளும் கொண்ட கேந்திரபாரா நகரத்தின் மக்கள் தொகை 47,006 ஆகும். அதில் ஆண்கள் 24,212 மற்றும் 22,794 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,890 மற்றும் 605 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 67.91%, இசுலாமியர் 31.64% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "KSHETRA". Report Odisha. Archived from the original on 2017-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-11-25.
  2. "STD Codes for indian cities, Search Telephone area phone Dialing codes".
  3. Kendrapara Population, Religion, Caste, Working Data Kendrapara, Odisha - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேந்திராபடா&oldid=3635726" இலிருந்து மீள்விக்கப்பட்டது