கேரள கொண்டைக் கழுகு

பறவை இனம்
கேரள கொண்டைக் கழுகு
தட்டெக்காடு பறவைகள் சரணாலயத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிசேடசு

வெயிலோட், 1816
இனம்:
நி. கெளார்தி
இருசொற் பெயரீடு
நிசேடசு கெளார்தி
லெக்கீ, 1878
வேறு பெயர்கள்

இசுபைசேயிடசு கெளார்தி
நிசேடசு நிபாலென்சிசு கெளார்தி

கேரள கொண்டைக் கழுகு[1] (Legge 's hawk-eagle) என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவையாகும். இது எல்லா கழுகுகளையும் போலவே, பாறுக் குடும்பத்தில் உள்ளது. இது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வரை இந்திய துணைக்கண்டத்தில் இனப்பெருக்கம் செய்கிறது.[2] இதன் சிற்றினப் பெயரான கெளார்தி என்பது மருத்துவர்-விலங்கியல் நிபுணரான இ. எப் கெலார்ட்டைக் கெளரவிக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கேரள கொண்டைக் கழுகு ஒரு நடுத்தர அளவிலான கழுகும், மிகவும் பெரிய அளவிலான கொன்றுண்ணியும் ஆகும். பொதுவாக வளர்ந்த இந்தக் கழுகுகின் உடலின் மேல்பகுதியும், பறக்கும் இறகுகள் மற்றும் வால் ஆகியவற்றின் அடிப்பகுதி தவிர உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி வெளிர் பழுப்பாக இருக்கும். மார்பகத்திலும், வயிற்றுப் பகுதியிலும் பெரிதும் கோடுகளுடன் உள்ளன. இதன் இறக்கைகள் வளைந்த விளிம்புடன் அகலமாக இருக்கும். மேலும் இவை பறக்கும்போது ஆழமற்ற V போன்று வைத்திருக்கும். பாலினங்களுக்கு இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் இளம் பறவைகளின் தலை பெரும்பாலும் வெள்ளை நிறம் கொண்டவை.

இலங்கையில் படம்பிடிக்கபட்ட ஒரு கேரளக் கொண்டைக் கழுகு.

கேரள கொண்டைக் கழுகு முன்பு மலை பருந்து-கழுகுகளின் கிளையினமாகக் கருதப்பட்டது. புவியியல் தனிமைப்படுத்தல் மற்றும் ஒலி எழுப்புதலில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இது ஒரு முழு இனமாக கருதப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கபட்டது.[3] அனைத்து அளவீடுகளையும் கருத்தில் கொள்ளும்போது, கேரளக் கொண்டைக் கழுகானது மலை பருந்து கழுகுகளை விட சராசரியாக 5-10% சிறியதாக இருக்கும். இருப்பினும் இதன் வால் நீளம் மட்டும் சராசரியாக சற்று கூடுதலாக உள்ளது. மேலும், இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண் பறவை 1.93 kg (4.3 lb) எடையைக் கொண்டிருந்தது. பெரும்பாலானவை ஆண் மலை பருந்து-கழுகுகளை விட சற்றே சிறியவை. [3] சராசரி மொத்த நீளத்தில், ஆண் கேரளக் கொண்டைக் கழுகுகள் சராசரியாக 70 cm (28 அங்) நீளம் ஆகும். மேலும் பெண் பறவைகள் சராசரி நீளம் சுமார் 76 cm (30 அங்) ஆகும். [4]

இது மலைக்காடுகளில் பெரிய மரத்தில் குச்சிகளைக் கொண்டு பெரிய கூடு கட்டும். ஒரே சமயத்தில் இரண்டு கூடுகள் கட்டும். ஆனால் ஒரு முட்டை மட்டும் இடும். முட்டை வெண்மை நிறத்தில் இருக்கும். முட்டை சாம்பல், மஞ்சள் கரைகள் கொண்டதாக இருக்கும். கேரளக் கொண்டைக் கழுகுகள் சிறிய பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனவற்றை உண்கின்றன. ஒப்பீட்டளவில் மிதமான அளவில் இருந்தபோதிலும், கேரளக் கொண்டைக் கழுகு பல பூட் கழுகுகளைப் போலவே பெரிய குதிகால்களைக் கொண்ட ஒரு ஆற்றல்மிக்க வேட்டையாடி உயிரினமாகும். மேலும் சில சமயங்களில் இது தன்னை விட கனமான இரையைத் துரத்துவதாக அறியப்படுகிறது. 2.8 முதல் 4 kg (6.2 முதல் 8.8 lb) எடையுள்ள இந்திய மயில்களும் இதில் அடங்கும்.[5]

அடிக் குறிப்புகள் தொகு

  1. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 58-59. 
  2. Grimmett, Richard; Inskipp, Carol, Inskipp, Tim & Byers, Clive (1999): Birds of India, Pakistan, Nepal, Bangladesh, Bhutan, Sri Lanka, and the Maldives. Princeton University Press, Princeton, N.J. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6
  3. 3.0 3.1 Gjershaug, J. O.; Diserud, O. H.; Rasmussen, P. C. & Warakagoda, D. (2008) "An overlooked threatened species of eagle: Legge’s Hawk Eagle Nisaetus kelaarti (Aves: Accipitriformes)" (PDF) Zootaxa 1792: 54–66
  4. Harrison, J. (2011). A field guide to the birds of Sri Lanka. Oxford University Press.
  5. Fam, S. D., & Nijman, V. (2011). Spizaetus hawk-eagles as predators of arboreal colobines. Primates, 52(2), 105-110.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nisaetus kelaarti
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_கொண்டைக்_கழுகு&oldid=3759776" இலிருந்து மீள்விக்கப்பட்டது