கேரி யுவரோவ்ஸ்கி
கேரி யுவரோவ்ஸ்கி (ஆங்கில மொழி: Gary Yourofsky; உச்சரிப்பு: /jʊəˈrɒfski/; பிறப்பு: ஆகஸ்ட் 19, 1970)[1] ஒரு அமெரிக்க விலங்குரிமை ஆர்வலரும் விரிவுரையாளரும் ஆவார். தற்கால நனிசைவ சித்தாந்தத்தில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராவார்.[2]
கேரி யுவரோவ்ஸ்கி | |
---|---|
கேரி யுவரோவ்ஸ்கி, 2013 | |
பிறப்பு | ஆகத்து 19, 1970 டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
பணி | விரிவுரையாளர், விலங்குரிமை செயற்பாட்டாளர் |
அறியப்படுவது | விலங்குரிமை குறித்த விரிவுரைகள் |
வலைத்தளம் | |
www |
2002-க்கும் 2005-க்கும் இடையிலான காலகட்டத்தில் யுவரோவ்ஸ்கி அளித்த நனிசைவ வாழ்வுமுறையினை ஊக்குவிக்கும் பல பொது விரிவுரைகளுக்கு பீட்டா (PETA) அமைப்பி நிதியுதவி வழங்கி உதவியது. 2010-ஆம் ஆண்டில், ஜார்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கல்லூரியில் இவர் ஆற்றிய உரை யூடியூப் காணொளியாக வெளியானதைத் தொடர்ந்து[3] யுவரோவ்ஸ்கியின் புகழ் உலகம் முழுவதும் (குறிப்பாக இஸ்ரேலில்[4]) வேகமாகப் பரவியது. மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்ற அந்தக் காணொளி பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யுவரோவ்ஸ்கி அவரது செயற்பாடுகளுக்காகப் பலரால் பாராட்டப்பட்டும்[5] அவரது தீவிரக் கருத்துக்களுக்காக மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டும் உள்ளார். இவர் 1997 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 13 முறை கைது செய்யப்பட்டார். மேலும் 1999 இல் கனடாவில் உள்ள ஒரு உரோமப் பண்ணையை சோதனை செய்து 1997-ல் மின்க் (mink) எனப்படும் 1,542 உரோமக்கீரிகளை விடுவித்து அதற்காக 77 நாட்கள் கடுங்காவல் சிறையில் கழித்துள்ளார்.[6][7] கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் நுழைவதற்கும் இவர் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்.[8]
மார்ச் 30, 2017 அன்று, யுவரோவ்ஸ்கி தனது முகநூல் பக்கத்தில் தனது விலங்குரிமை செயற்பாடுகளுக்கு ஓய்வு கொடுப்பதாக அறிவித்தார்: "எனது தேக்கம் முற்றிலுமாகத் தீர்ந்து விட்டது. எனவே விலங்குரிமைத் திட்டங்களில் மாணவர்களுக்கு உதவுவது, நனிசைவ வாழ்வுமுறையினைத் துவங்கும் நபர்களின் மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்டவை தவிர வேறு வகையில் இனி வலைதளங்களிலோ நேர்முக செயற்பாடுகளிலோ இனி பங்கு கொள்ள மாட்டேன்" என்று தனது விடைபெறும் உரையில் அவர் கூறியிருந்தார்.[9]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயுவரோவ்ஸ்கி அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.[10][11] அவர் ஓக் பார்க் நகரில் வளர்ந்தார்.[11] யுவரோவ்ஸ்கி தனது வலது முன்னங்கையின் பெரும்பகுதியில் முகமூடி அணிந்த வண்ணம் ஒரு முயலைப் பிடித்துக் கொண்டு வண்ணம் இருக்கும் தனது சொந்த உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.[12]
2013-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் யுவரோவ்ஸ்கி தனது உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையில் தான் பிறருக்குத் தொல்லை தரும் ஒரு "வாண்டுப்பையனாக" விளங்கியதாகக் கூறினார். தான் அங்கு படித்த நான்கு ஆண்டுகள் முழுவதும் வேண்டுமென்றே கணித வகுப்புகளைப் புறக்கணித்ததை அந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் அப்பள்ளிப் படிப்பின் முடிவில் இச்செய்தியை அறிந்த அப்பள்ளியின் முதல்வர் தனக்கு பள்ளிப் படிப்புச் சான்றிதழை வழங்க மறுத்ததையும் பின்னர் அதை எதிர்த்து உறுதியுடன் நின்ற தனக்கு வேறு வழியின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்ததையும் யுவரோவ்ஸ்கி நினைவு கூர்ந்தார்.[13] யுவரோவ்ஸ்கி ஓக்லாந்துப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்து மேலும் ஸ்பெக்ஸ் ஹோவர்ட் ஸ்கூல் ஆஃப் மீடியா ஆர்ட்ஸ் கல்லூரியில் வானொலி ஒலிபரப்புத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.[14]
மேற்கோள் தரவுகள்
தொகு- ↑ "Gary Yourofsky – "convert 1000s to veganism every year" – My Care2". Archived from the original on April 4, 2012. பார்க்கப்பட்ட நாள் September 19, 2011. [Yourofsky's social media profile webpage containing self-entered data]
- ↑ "How one man turned 8% of Israel vegan with a YouTube speech" (in en-GB). Metro. 2015-09-28. http://metro.co.uk/2015/09/28/how-animal-rights-activist-gary-yourofsky-turned-8-of-israels-population-vegan-after-comparing-slaughterhouses-to-the-holocaust-5361205/.
- ↑ Best Speech You Will Ever Hear - Gary Yourofsky
- ↑ "About the Israeli Campaign". gary-tv. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
- ↑ Talshir, Rachel (12 December 2013). "Even vegan hero Gary Yourofsky finds it hard to be a guru". Haaretz. http://www.haaretz.com/opinion/.premium-1.563134.
- ↑ North Shine, Kim (7 December 1998). "Champion or Criminal? Royal Oak Animal Activist Faces Trial in Canadian Mink Release". Detroit Free Press.
- ↑ West, Evan (March 2006). "Watching What You Eat". Indianapolis Monthly: 90. பன்னாட்டுத் தர தொடர் எண்:0899-0328. https://books.google.com/books?id=zQsDAAAAMBAJ&pg=PA90. பார்த்த நாள்: March 19, 2012. "In 1997, he was arrested for helping to release around 1,500 animals from a Canadian mink farm and was sentenced to six months in prison.".
- ↑ "About Gary Yourofsky << About ADAPTT << ADAPTT :: Animals Deserve Absolute Protection Today and Tomorrow".
- ↑ "Gary Yourofsky Retires from Social Media Activism". Plant Based News. March 28, 2018. பார்க்கப்பட்ட நாள் March 28, 2018.
- ↑ Darom, Naomi (2012-09-06). "Is vegan superstar Gary Yourofsky an animal savior or a mad militant?". Haaretz. Archived from the original on 2013-12-18. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16.
In that period he was still a meat eater. But one day, when he was filming the trucks that transported animals to slaughter, his gaze encountered that of a pig.
- ↑ 11.0 11.1 Lessenberry, Jack (2001-06-24). "Activist devotes life to animal rights". The Toledo Blade இம் மூலத்தில் இருந்து 2013-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131218195113/http://www.toledoblade.com/JackLessenberry/2001/06/24/Activist-devotes-life-to-animal-rights.html. "He lives in a tiny apartment with his ancient dog, Rex, and probably could fit all his worldly goods into his car."
- ↑ Lessenberry, Jack (2003-06-15). "The lonely life of an animal rights activist in the Midwest". The Toledo Blade இம் மூலத்தில் இருந்து 2013-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131218195120/http://www.toledoblade.com/JackLessenberry/2003/06/15/The-lonely-life-of-an-animal-rights-activist-in-the-Midwest.html. "For a brief time, he was on staff of PETA, People For the Ethical Treatment of Animals, but he found that too confining."
- ↑ Interview with Yourofsky ([00:20:22]) at the Israeli Educational Television station
- ↑ "ADAPTT". Archived from the original on 17 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)