கே. எஸ். மனோஜ்

இந்திய அரசியல்வாதி

குரிசிங்கல் செபாஸ்டியன் மனோஜ் (K. S. Manoj) (பிறப்பு: ஏப்ரல் 19, 1965) இவர் ஒரு மருத்துவரும் மற்றும் இந்திய அரசியல்வாதியும் ஆவார் . இவர் கேரளாவைச் சேர்ந்தவர். மேலும், 14 வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார். ஆலப்புழா மக்களவைத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] இவர் மீண்டும் இதே தொகுதியில் இருந்து 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கே.சி.வேணுகோபாலிடம் தோற்றார்.

மனோஜ் முன்வைத்த, மிக முக்கியமான மசோதாக்களில் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கிய "மீனவர்கள் (நலன்புரி) மசோதா", [2] "பெட்ரோல் பம்ப் தொழிலாளர்கள் (நலன்புரி) மசோதா 2005" மற்றும் "தி கொயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் (நலன்புரி) மசோதா 2006" ஆகியவை அடங்கும். [3]

கட்சியின் ஆற்றல் மிகுந்த வரிசை, அவரது மத நம்பிக்கைகளுடன் மோதியது என்பதனைக் காரணம் காட்டி அவர் சனவரி 9, 2010 அன்று சிபிஐ (எம்) பதவியை ராஜினாமா செய்தார். [4]

கல்வித் தகுதி

தொகு
  • எம்பிபிஎஸ், டிஏ ( அனஸ்தீசியாலஜி டிப்ளோமா)
  • டி.டி. மருத்துவக் கல்லூரி, ஆலப்புழா மற்றும் அரசு. மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்

பிற பதவிகள்

தொகு
  • உறுப்பினர், பாதுகாப்பு குழு
  • உறுப்பினர், ஆலோசனைக் குழு, வேளாண் அமைச்சகம்
  • உறுப்பினர், பாதுகாப்பு நிலைக்குழு
  • மருத்துவ உதவி காப்பீட்டு அதிகாரி, 1993-98
  • அனஸ்தீசியாலஜி விரிவுரையாளர், 1998-2004
  • வாழ்நாள் உறுப்பினர், (i) இந்திய மருத்துவ சங்கம்; (ii) வலி மற்றும் நோய்தடுப்பு பராமரிப்புக்கான இந்தியச் சங்கம்; (iii) இந்திய சங்கம்- மயக்க மருந்து நிபுணர்கள் ;
  • முன்னாள் மாநில செயலாளர், கேரள அரசு மருத்துவக் கல்லூரி ஆசிரியர் சங்கம்
  • உறுப்பினர், தேசிய சேவை திட்டம்
  • முன்னாள் தலைவர், கேரள கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (KCYM)
  • உறுப்பினர், கல்விக்குழு, கேரள பல்கலைக்கழகம்

குறிப்புகள்

தொகு
  1. "Detailed Profile - Dr. K.S. Manoj - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
  2. http://164.100.24.208/ls/CommitteeR/PrivateMemBills/17threp.pdf
  3. "Lok Sabha". 164.100.24.209. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Archived copy". Archived from the original on 16 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 January 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._மனோஜ்&oldid=3082194" இலிருந்து மீள்விக்கப்பட்டது