கே. கே. இராமச்சந்திரன் நாயர்

இந்திய அரசியல்வாதி

கே. கே. இராமச்சந்திரன் நாயர் (K. K. Ramachandran Nair) (1953 - 14 சனவரி 2018)[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிசம்) அரசியல்வாதியாவார். கேரள சட்டமன்றத்தில் செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதியை 2016 முதல் தான் இறக்கும் வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

வழக்கறிஞர் கே. கே. இராமச்சந்திரன் நாயர்
செங்கன்னூர் தொகுதியின்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2018
முன்னையவர்பி. சி. விஷ்ணுநாத்
பின்னவர்சாஜி செரியன்
தொகுதிசெங்கன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1953
ஆலா, செங்கன்னூர்
இறப்பு14 சனவரி 2018[1]
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)
துணைவர்பொன்னுமணி
பிள்ளைகள்பிரசாந்த்
வாழிடம்(s)செங்கன்னூர், கேரளம்
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்

சொந்த வாழ்க்கை

தொகு

இவர், 1953 இல் செங்கன்னூர், ஆலாவில் பிறந்தார். பந்தளம், நாயர் சேவை அமைப்பின் கல்லூரியில் முதுகலை பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் திருவனந்தபுரத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் 1978 இல் சட்டப் பட்டம் பெற்றார்.

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் 14 ஜனவரி 2018 அதிகாலை 4 மணிக்கு இறந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

2001ஆம் ஆண்டு [[கேரள சட்டமன்றத் தேர்தலில் செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் சோபனா ஜார்ஜ் என்பவரால் 1465 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.[3]

2016இல் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் பி. சி. விஷ்ணுநாத்தை 7983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2018இல் தான் இறக்கும் வரை இப் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு