கே. கே. நாயர்
கடங்கலத்தில் கருணாகரன் நாயர் (Kadangalathil Karunakaran Nayar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கடங்கலத்தில் கருணா கரண் நாயர், கே. கே. நாயர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] உத்தரப் பிரதேச மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். அயோத்தி ராமசென்மபூமி சர்ச்சையில் கே.கே. நாயர் முக்கிய பங்கு வகித்தார். [2]
கே.கே. நாயர் 1907 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர், ஆலப்புழா மாவட்டம், குட்டநாட்டில் உள்ள கண்டங்கலத்தில் சங்கர பணிக்கர் மற்றும் பார்வதி அம்மாளின் ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். சனாதன தர்ம வித்யாசாலா, ஆலப்புழா, எசுஎம்வி உயர்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம், பல்கலைக்கழகக் கல்லூரி (அப்போது மெட்ராசு பல்கலைக்கழகத்தின் கீழ்) பாரா சைனி கல்லூரி, அலிகார் (ஆக்ரா பல்கலைக்கழகம்) (1954-56) மற்றும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (1928-30) ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.) தன்னுடைய 21 ஆவது வயதில் இந்தியக் குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்றார். [3]
படிப்பு முடிந்ததும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரசம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு சுதாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். ஐக்கிய மாகாணங்களுக்கு பணியேற்றபோது இவர்களுக்கு விவாகரத்து நிகழ்ந்தது. பின்னர் இவர் ஏப்ரல் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சகுந்தலா நாயரை மறுமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கும் மார்த்தாண்ட விக்ரமன் நாயர் என்ற குழந்தை உள்ளது.
1930 ஆம் ஆண்டில் இவர் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்தார். உத்தரப் பிரதேசத்தில் கோண்டா (1946), பைசாபாத் (1 சூன் 1949 - 14 மார்ச்சு 1950) உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராம் லல்லா சிலை வைக்கப்பட்டபோது அயோத்தியின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்ட ஆட்சியராக இருந்தார். [4] [5] 1952 ஆம் ஆண்டில் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். [6] அதன் பிறகு இவர் பாரதிய சனசங்கத்தில் சேர்ந்தார். 1965-67 ஆம் ஆண்டுகள் வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் பாரதிய சனசங்கத்தின் வேட்பாளராக பக்ரைச்சு மக்களவைத் தொகுதியில் இருந்து நான்காவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. 2003.
- ↑ "City of 'New Delhi' was named on Dec 31, 1926". 2015-03-15. https://economictimes.indiatimes.com/magazines/panache/city-of-new-delhi-was-named-on-dec-31-1926/articleshow/46571432.cms?from=mdr. பார்த்த நாள்: 2024-01-25.
- ↑ "Nair 'saab', the Faizabad District Magistrate who defied Nehru's directive in 1949 to remove Ram Lalla idol" (in ஆங்கிலம்). 2024-01-21. பார்க்கப்பட்ட நாள் 2024-01-25.
- ↑ Service, Express News (2024-01-22). "Ayodhya cherishes Malayali civil servant who defied Nehru's order to remove Ram Lalla idol" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-25.
- ↑ Raghunath, Arjun. "Ex-Malayali bureaucrat widely remembered as Ayodhya Ram temple becomes reality" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-25.
- ↑ "Members Bioprofile". 1907-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-04-26.
- ↑ "Ram Mandir: From Nayar to Nripendra, a tale of two IAS officers in Ayodhya". 2024-01-21. https://economictimes.indiatimes.com/news/india/ram-mandir-from-nayar-to-nripendra-a-tale-of-two-ias-officers-in-ayodhya/articleshow/107011935.cms?from=mdr.