க. கு. முகமது

இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்

கரிங்கமண்ணு குழியில் முகமது ஒரு இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் வடக்கு மண்டல இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். 2019-ஆம் ஆண்டு இவர் பத்மசிறீ[1] விருது பெற்றார்.

க. கு. முகமது
மண்டல இயக்குனர் (வடக்கு),
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
பதவியில்
2012–2012
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் திம்ரி
Superintending Archaeologist,
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
Offices Held தில்லி (2008-2012),
போபால் (2004-2008),
சத்தீசுகர் (2003-2004),
ஆக்ரா (2001-2003),
பாட்னா (1997-2001)
Dy. Superintending Archaeologist,
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
Offices Held கோவா (1991-1997),
சென்னை (1988-1990)
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூலை 1952 (1952-07-01) (அகவை 71)
கோழிக்கோடு, கேரளா
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) இரபியா முகமது
பிள்ளைகள் சம்சேது முகமது, சகீன் முகமது
இருப்பிடம் கோழிக்கோடு, கேரளா
படித்த கல்வி நிறுவனங்கள் அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம்
விருதுகள் பத்மசிறீ (2019)

இளமைக்காலம் தொகு

முகமது கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பீரான் குட்டி ஹாஜியும் மரியமும். இவர்களது ஐந்து மக்களுள் இவர் இரண்டாவது. அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப்பட்டமும் (1973-75) தில்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் பள்ளியில் தொல்லியலில் முதுகலைப் பட்டயமும் (1976-77) பெற்றார்.

குறிப்பிடத்தக்க தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொகு

  • இபாதத்துக் கானா என்னும் ஒரு கட்டிடத்தை அகழ்ந்தெடுத்தார். இதுவே அக்பர் தீன்-இலாகி என்னும் ஒரு கூட்டு மதத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் இடம்.
  • பதேபூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட வட இந்தியாவின் முதல் கிறித்துவ வழிபாட்டிடத்தைக் கண்டறிதல்.
  • கேசரியா என்னும் ஊரில் அசோகரால் கட்டப்பட்ட ஒரு பவுத்தத் தூபியைக் அகழ்ந்தெடுத்தல்.[2]
  • இராசகிர் என்னும் இடத்திலும் ஒரு பவுத்தத் தூபியைக் கண்டறிந்து அகழ்ந்தெடுத்தல்.
  • வைசாலியில் உள்ள ஒரு பவுத்தத் தொல்லியற்களம்.
  • கேரளத்தின் மலப்புரத்திலும் கோழிக்கோட்டிலும் பல குடைவரைக் குகைகளும், கல்திட்டைகளும் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து அகழ்ந்தெடுத்தல்

தண்டேவாடா கோவில்கள் தொகு

சத்தீசுகர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பர்சூர், சாம்லூர் கோவில்களை மீட்டெடுத்தார். இப்பகுதி நக்சல் நடவடிக்கைகள் உள்ள பகுதியாக இருப்பினும் நக்சல் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஒத்துழைப்புடன் இக்கோவில்களை மீட்டெடுக்க வழிவகை செய்தார்.

பத்தேசுவர் கோவில்கள் தொகு

குவாலியருக்கு 40 கி.மீ தொலைவில் உள்ள மொரீனா பத்தேசுவரில் உள்ள சிவாலயங்களும் பெருமாள் கோவில்களும் உள்ள 200 கோவில்களைக் கொண்ட வளாகம் ஒன்றுள்ளது. இங்குள்ள கோவில்கள் கச்சூரகோவிற்கு 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இப்பகுதி காட்டுக்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. முகமது அவர்களிடம் பேசி கோவில்களை மீட்டெடுக்க ஒப்புதல் பெற்றார். இவரது பணிக்காலத்தில் 60 கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன.

தன்வரலாறு தொகு

2016-இல் இவர் தனது வாழ்க்கைவரலாற்று நூலை வெளியிட்டார். மார்க்சிய வரலாற்றாளர்கள் முசுலிம் அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து அயோத்திச் சிக்கலில் ஒரு தீர்வு ஏற்படவதற்குக் குந்தகம் விளைவித்தார்கள் என்று இப்புத்தகத்தில் கூறியிருந்தார். இதனால் இந்த நூல் கவனம் பெற்றது. மேலும் அயோத்தியில் மசூதிக்குக் கீழே கோவில் இருந்ததற்கான தெளிவான தொல்லியற்சான்றுகள் இருந்தும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாததோடு அலகாபாத் உயர்நீதிமன்றத்தினையும் தவறாக வழிநடத்தினார்கள் என்றும் கூறியிருந்தார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கு._முகமது&oldid=2972702" இருந்து மீள்விக்கப்பட்டது