கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி
கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி (KCG College of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இதன் நிறுவனர்-தலைவர் கே. சி. ஜி. வர்கீசு ஆவார். "ஒவ்வொரு மனிதனையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்; எந்த மனிதனையும் தோல்வியடையச் செய்யக்கூடாது" என்ற நோக்கத்தை நிறைவேற்ற 1998ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது.
குறிக்கோளுரை | "To make every man a success and no man a failure." |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1998 |
தலைவர் | எலிசபெத் வர்கீசு |
முதல்வர் | பி. தெய்வ சுந்தரி |
பணிப்பாளர் | ஆனந்த் ஜோகப் வர்கீஸ் |
CEO | ஆனந்த் ஜோகப் வர்கீசு |
அமைவிடம் | , , 12°55′12″N 80°14′24″E / 12.92000°N 80.24000°E |
வளாகம் | 200,000 சதுர அடிகள் (19,000 m2) |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official Website |
வரலாறு
தொகுகே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி 1998இல் நிறுவப்பட்டது. இது ஒரு கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. மேலும் புது தில்லியின் ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஐ. எஸ். ஓ. 9001: 2000 சான்றிதழ் பெற்றுள்ளதுது.[1]
வளாகம்
தொகுஇந்தக் கல்லூரியானது, பழைய மகாபலிபுரம் சாலையில் (ஐ. டி. நெடுஞ்சாலை) அடையாரிலிருந்து (தெற்கு சென்னை) சுமார் 8 கி.மீ. தொலைவில் காரப்பாக்கத்தில் அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகு- பி. இ. ஊர்திப் பொறியியல்
- பி. இ. வானூர்திப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி. இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல்
- மின் மற்றும் மின்னணுப் பொறியியல்
- பி. இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
- பி. இ. இயந்திரப் பொறியியல்
- பி. டெக். தகவல் தொழில்நுட்பம்
- பி. டெக். ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம்.
முதுநிலைப் படிப்புகள்
தொகு- எம். இ. தொடர்பியல் அமைப்பு
- எம். இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம். இ. உற்பத்தி வடிவமைப்பு
- எம். இ. மின்னணு ஆற்றல் மற்றும் செயலி.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- வினீத் ஸ்ரீனிவாசன், பாடகர், நடிகர், மலையாளத் திரைப்பட இயக்குநர்.
- அஜு வர்கீஸ், மலையாளத் திரைப்பட நடிகர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "K.C.G. College of Technology college reviews & Ratings, January –27, 2015". TNEA Anna university. Archived from the original on 2014-12-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.