கே. ஜி. கென்யே

இந்திய அரசியல்வாதி

கே. ஜி. கென்யே (K. G. Kenye) என்பவர் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பிராந்தியக் கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார். இவர் நாகாலாந்து முதல்வரின் முன்னாள் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[2] 26 நவம்பர் 2015 அன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியிலிருந்த கெகிஹோ ஜிமோமி இறந்த பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கெகிஹோ ஜிமோமி 2 ஏப்ரல் 2016 அன்று ஓய்வு பெற்ற பின்னர், புதிய பதவிக்காலத்திற்கான தேர்தல் 14 மார்ச் 2016 நடைபெற்றது. இதில் கென்யே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

கே. ஜி. கென்யே
நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை - நாகலாந்து
பதவியில்
3 ஏப்ரல் 2016 – மார்ச் 2022
முன்னையவர்கெகிஹோ ஜிமோமி, நாகாலாந்து மக்கள் முன்னணி
பின்னவர்பாங்னோன் கொன்யாக்
தொகுதிநாகாலாந்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 நவம்பர் 1960 (1960-11-06) (அகவை 63)
அரசியல் கட்சிநாகாலாந்து மக்கள் முன்னணி
துணைவர்சஷிலா கென்யே
பிள்ளைகள்4
பெற்றோர்கோயிப்ரா கென்யே[1]
முன்னாள் கல்லூரிகோகிமா கல்லூரி (வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்)[1]
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 http://ceonagaland.nic.in/files/KGKenye.pdf [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "NPF to nominate KG Kenye for Rajya Sabha - Nagaland Page". Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
  3. "K G Kenye declared elected RS MP from Nagaland". http://www.business-standard.com/article/pti-stories/k-g-kenye-declared-elected-rs-mp-from-nagaland-116031401167_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._கென்யே&oldid=3926371" இலிருந்து மீள்விக்கப்பட்டது