கே. பி. கே. மேனன்

கே.பி கேசவ [1] மேனன் (K. P. K. Menon) (1884 -?) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும், முன்னணி இந்திய சுதந்திர ஆர்வலருமாவார். [2] இவர் இந்திய சுதந்திரக் கழகம் உருவாவதற்கு முக்கிய ஆதரவாளராகவும், இந்திய தேசிய இராணுவத்தின் வழக்கறிஞராகவும் இருந்தார். [3] [4]

ஆரம்ப வாழ்க்கை

தொகு

இவர் சென்னையிலும், இங்கிலாந்திலும் கல்வி கற்றார். முதலாம் உலகப் போருக்குப் பிறகு கோழிக்கோட்டில் தனது சொந்த சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் அன்னி பெசண்டின் சுயாட்சி இயக்கத்தின் ஒரு கிளையைத் திறந்தார். இவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் "பொதுமக்கள் கேள்விகளைப் எழுப்பவும், அதே நேரத்தில் ரிக்‌ஷா இழுப்பவர்களுக்கு ஒரு தொழிற்சங்கத்தை ஒழுங்கமைக்கவும் "நியூ ஃபேபியன் இயக்கத்தின் ஒரு கிளையைத் தொடங்கினார்.

காங்கிரசு கட்சியில்

தொகு

பின்னர் இவர் சி.ராஜகோபாலாச்சாரியைச் சந்திக்க கேரளாவுக்குத் திரும்பினார். பின்னர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். உள்ளூர் பத்திரிகைகள் காங்கிரசு கட்சி செய்திகளை வெளியிடாமல் இருப்பதை தெரிந்து கொண்டு, இவர் தனது மலையாள நாளிதழைத் தொடங்கினார். [1] 1927 ஆம் ஆண்டில், சிறைத்தண்டனை அனுபவித்தபோது இவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இவர் தனது மீதமுள்ள குடும்பத்துடன் மலேசியாவுக்குச் சென்று, ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றவும், சமாதான உறவுகளைத் தொடங்கவும், தனது மகன் உன்னியை பிரித்தானியப் பேரரசின் விமானப்படையில் சேர்த்தார். இவர் அடிக்கடி இத்தாலிய மற்றும் ஜெர்மன் ஒளிபரப்புகளைக் கேட்பார். மேலும் அவர்களின் தோல்விகளில் மகிழ்ச்சியடைந்தார்.

இந்திய தேசிய இராணுவம்

தொகு

1930களில், ராஷ் பிஹாரி போஸ் தலைவராகவும், மோகன் சிங்கை, தளபதியாகவும் கொண்ட ஒரு அதிரடிக் குழுவை உருவாக்க உதவினார். இதில் உறுப்பினர்களாக மியான் குலாம் ஜிலானியும், இவரும் இருந்தனர். இக்குழு "இந்தியாவைத் தாக்கும் திட்டங்கள் மற்றும் தாக்குதல்கள்சியும், கொள்கைகளின் பரந்த வடிவமைப்பையும் தயாரித்தது". மேலும், பிரதிநிதிகள், பிராந்தியம், உள்ளூர் கிளைகளின் குழுவுடன் முழுமையாக இணைந்தது. [5] இருப்பினும், யப்பானியர்கள், சிங்கப்பூரில் இருந்தபோது இவரது இந்திய வானொலி ஒலிபரப்பில் தலையிட்டார்கள். 1942 ஆம் ஆண்டில் இக்குழுவிலிருந்தும், இந்திய தேசிய இராணுவத்திலிருந்தும் வெளியேறினார். [1]

போசின் மீதான விமர்சனம்

தொகு

பின்னர், இவர் 22 ஏப்ரல் 1944 இல், இவர் யப்பானிய பாதுகாப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது, யப்பானியர்களையும் சுபாஷ் சந்திர போஸையும் விமர்சித்தார். வெறுப்புடன், வெளிப்படையாக போஸ் ஒரு அவநம்பிக்கையானவர் என்றும், சோம்பேறி மற்றும் பொறுப்பற்ற ஒரு நபர் என்றும் விமர்சனம் செய்தார். இந்த நடத்தை போஸுக்கும் யப்பானியர்களுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. மேலும், இவரை இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரித்தது. ஒரு இராணுவ நீதிமன்றம் "யப்பானின் மேல் நம்பிக்கை இல்லாததற்கும், போஸை ஒரு பாசிசவாதி என்று அழைத்ததற்காகவும்" இவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. நிலைமை இவ்வாறு இருந்தபோதிலும், போஸ் ஒருபோதும் இவரை நிலைமை இவ்வாறு இருந்தபோதிலும், போஸ் ஒருபோதும் கைது செய்ய உத்தரவிடவில்லை அல்லது இந்த விஷயத்தில் ஈடுபடவில்லை. [6][7]

இந்திய சுதந்திரக் கழகம்

தொகு

இந்திய சுதந்திரக் கழகத்தின் பிரதிநிதியாக, தோக்கியோ, பாங்காக் [8] மலேசியா போன்ற இடங்களில் நடந்த பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டார். மேலும் புஜிவாரா குலத்தினருடன் பழகினார். [9]

கே.பி.கே என்று அழைக்கப்பட்ட இவர், பின்னர் இந்தியா மற்றும் இந்திய சுதந்திக் கழகம் குறித்தும் யப்பானிய ஏகாதிபத்திய வடிவமைப்புகளையும் கடுமையாக விமர்சித்தார். பின்னர் கெம்பீதாயால் கைது செய்யப்பட்டார். இந்திய தேசியவாதிகளுடன் ஈடுபாடு கொண்ட இவர் 1946, 1947 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடுக்கு வந்தார். [10] 1947 முதல் 1948 வரை இராஜதந்திர பதவியை வகித்தார். இவரது கைது இறுதியில் சிங்கப்பூரில் யப்பானிய உயர் கட்டளையுடன் மோகன் சிங் தேவ் மோதலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இவர் ஒரு வழக்கறிஞராகவும், சிங்கப்பூரில் இந்திய சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் பணியாற்றி வந்தார். திசம்பர் 1942 இல் இவர் இந்திய தேசிய இராணுவத்திலிருந்து வெளியேறியதும் முதல் இந்திய தேசிய இராணுவம் சரிவை சந்தித்தது. [11]

நூல் வெளியீடு

தொகு

தி கிரேட் டிரையல் ஆப் மகாத்மா காந்தி அன்ட் மிஸ்டர். பேங்கர் (1922) [12] என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். மேலும் சட்டாம்பி சுவாமிகள்: தி கிரேட் ஸ்காலர் - செயிண்ட் ஆஃப் இந்தியா (1967) என்ற நூலையும் எழுதியுள்ளார். [13]

மேனனைப் பற்றிய செய்திகளோடு 2014 ஆம் ஆண்டில், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் உதவி இயக்குநரும் மூத்த உறுப்பினரும் , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் திட்டத்தின் உதவி பேராசிரியருமான முனைவர் ராஜேஷ் ராய் , 1819-1945: இந்தியன் இன் சிங்கப்பூர் என்ற புத்தகத்தை வெளியிட்டார் . மேலும், டையாஸ்போரா இன் தி கலோனியல் போர்ட்- சிட்டி என்ற நூலையும்ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Ward Fay, Peter (1995). The Forgotten Army: India'sIndia's Armed Struggle for Independence, 1942-1945. University of Michigan Press. pp. 47–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0472083422. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  2. Woon, Walter (2013). Devil's Circle. Marshall Cavendish (Asia). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9814435813. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  3. Kratoska, Paul H. (1997). The Japanese Occupation of Malaya: A Social and Economic History. University of Hawaii Press. pp. 104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 082481889X. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  4. Sareen, Tilak Raj, Select documents on Indian National Army, page 261-269, 1988, Agam Prakashan
  5. Journal of Kerala Studies, Volume 32, page 205, University of Kerala, 2005
  6. Tour, Hugh (2007). Subhash Chandra Bose. Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172244010. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
  7. Willford, Andrew C. (2007). Cage of Freedom: Tamil Identity and the Ethnic Fetish in Malaysia. National University of Singapore Press. p. 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971693917. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
  8. Basu, Kanailal (2010). Netaji: Rediscovered. AuthorHouse. pp. 153–327. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1449055699. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
  9. Lebra, Joyce (2008). The Indian National Army and Japan. Institute of Southeast Asian Studies. pp. 39–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9812308067. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
  10. Chettur, Sankara Krishna, Malayan Adventure, page 32, 1948
  11. Stenson, M. (2011). Class, Race, and Colonialism in West Malaysia. University of British Columbia Press. pp. 55–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 077484440X. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
  12. The Gandhi Reader: A Sourcebook of His Life and Writings. Grove Press. 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802131611. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
  13. Chinmayananda, Swami. Journey Of A Master. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175973053. பார்க்கப்பட்ட நாள் September 11, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._கே._மேனன்&oldid=3285768" இலிருந்து மீள்விக்கப்பட்டது