கே. வி. வி. இராஜமாணிக்கம்

இந்திய அரசியல்வாதி

கே. வி. வி. ராஜமாணிக்கம்  (K. V. V. Rajamanickam) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்  ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1991 தேர்தல்களிலும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராஜமாணிக்கத்தின் சொந்த ஊர் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஆகும். இவர் தொடர்ந்து மூன்று முறை மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவரின் தந்தை கே. வி. வீரன் அம்பலம் தொடர்ந்து இரண்டு முறை மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._வி._இராஜமாணிக்கம்&oldid=3804209" இலிருந்து மீள்விக்கப்பட்டது