கைர்தல் திஜாரா மாவட்டம்
கைர்தல்-திஜாரா மாவட்டம் (Khairthal-Tijara district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 4 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும். இதன் தலைமையிடம் கைர்தல் நகரம் ஆகும். 2011ல் இதன் மக்கள் தொகை 9,66,821 ஆகும்.
கைர்தல்-திஜாரா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°56′N 76°47′E / 27.933°N 76.783°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
கோட்டம் | ஜெய்ப்பூர் |
நிறுவிய ஆண்டு | 4 ஆகஸ்டு 2023 |
தலைமையிடம் | கைர்தல் |
மக்கள்தொகை (2011)[1] | |
• Total | 9,66,821 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 301404 |
வாகனப் பதிவு | RJ-40 |
இணையதளம் | https://khairthaltijara.rajasthan.gov.in/home/dptHome/1283 |
மாவட்ட நிர்வாகம்
தொகுகைர்தல் திஜாரா மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[2]அவைகள் பின்வருமாறு:
- கைர்தல் வட்டம்
- திஜாரா வட்டம்
- கிசன்கர்பாஸ் வட்டம்
- கோட்காசிம் வட்டம்
- ஹர்சோலி வட்டம்
- தபுகாரா வட்டம்
- முண்டவார் வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இமாவட்டத்தின் மக்கள் தொகை 9,66,821 ஆகும். அதில் ஆண்கள் 511,007 மற்றும் பெண்கள் 455,814 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,65,680 (17.14%) மற்றும் 9,373 (0.97%) ஆக உள்ளனர்.[1]இம்மாவட்டத்தில் இந்தி மொழியை பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாக மேவாடி மொழி, அகிர்வாலி ஹரியானி மொழிகள் பேசுகின்றனர்..[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு.