கைர்தல் (Khairthal), இராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்ட கைர்தல் திஜாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் ஆரவல்லி மலைத்தொடரின் வடக்குக் கோடியில் உள்ளது. இது தில்லிக்கு தென்மேற்கே 133.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்பூருக்கு வடகிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கைர்தல்
நகரம்
கைர்தல் is located in இராசத்தான்
கைர்தல்
கைர்தல்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல் நகரத்தின் அமைவிடம்
கைர்தல் is located in இந்தியா
கைர்தல்
கைர்தல்
கைர்தல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°50′05″N 76°38′20″E / 27.8346°N 76.6388°E / 27.8346; 76.6388
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்கைர்தல்-திஜாரா
அரசு
 • வகைநகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்38,298
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • பேச்சு மொழிகள்இராஜஸ்தானி, மேவாடி, அகிர்வாலி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
301404
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுRJ-02

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 6,855 வீடுகளும் கொண்ட கைர்தல் நகராட்சியின் மக்கள் தொகை 38,298 ஆகும். அதில் ஆண்கள் 20,115 மற்றும் பெண்கள் 18,183 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 904 பெண்கள் வீதம் உள்ளனர்.சராசரி எழுத்தறிவு 82.56 % ஆக உள்ளது.இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24.77% மற்றும் 0.31% ஆக உள்ளனர். இந்துக்கள் 88.24%, முஸ்லீம்கள் 5.95%, சீக்கியர்கள் 5.50% மற்றும் பிறர் 031% ஆக உள்ளனர்.[1]

போக்குவரத்து

தொகு

தில்லி-ஜெய்ப்பூர் இருப்புப் பாதையில் கைர்தல் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]தில்லி-ஜெப்பூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 8 கைர்தல் வழியாக செல்கிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைர்தல்&oldid=4111949" இலிருந்து மீள்விக்கப்பட்டது