கைலாசு சங்கலா

கைலாசு சங்கலா (Kailash Sankhala; 30 சனவரி 1925 – 15 ஆகத்து 1994) என்பவர் இந்திய இயற்கையியலாளரும், இயற்கைக் காப்பாளரும் ஆவார். இவர் தில்லி, தேசிய விலங்கியல் பூங்காவின் இயக்குநராகவும், and Chief Wildlife Warden of ராஜஸ்தான் மாநில தலைமை வனவிலங்குக் காப்பாளராகவும் பணியாற்றினார்.[1] இவர் இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருந்த புலிகளைக் காப்பற்ற சிறப்பாக பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். இவர் இந்தியாவில் 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் முதலாவது இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[2] இவர் "இந்தியாவின் புலி மனிதர்" என அழைக்கப்பட்டார். இவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு சிறப்பித்தது. 2013 இல் ராசசுத்தான் ரத்தன் விருதும் வழங்கப்பட்டது.[3]

கைலாசு சங்கலா
Kailash Sankhala
பிறப்பு(1925-01-30)30 சனவரி 1925
சோத்பூர், இந்தியா
இறப்புஆகத்து 15, 1994(1994-08-15) (அகவை 69)
அறியப்படுவதுசூழலியல் செயற்பாட்டாளர், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் முதலாவது இயக்குநர்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள்

தொகு
  1. Valmik Thapar (1 February 2006). Saving Wild Tigers 1900–2000. Orient Blackswan. pp. 155–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-150-0.
  2. Sujit Mukherjee (1 January 1993). Forster and Further: The Tradition of Anglo-Indian Fiction. Orient Blackswan. pp. 222–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86311-289-8.
  3. https://www.telegraphindia.com/india/on-international-tiger-day-discovery-tells-the-story-of-indias-tiger-man/cid/1695385
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_சங்கலா&oldid=3031008" இலிருந்து மீள்விக்கப்பட்டது