கைலாசு சந்திர மகிந்திரா

கைலாசு சந்திர மகிந்திரா ( Kailash Chandra Mahindra) (1894-1963) பொதுவாக கே. சி. மகிந்திரா என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்தியத் தொழிலதிபராவார். 1945 ல் ஜகதீசு சந்திர மகிந்திரா, மாலிக் குலாம் முகமது ஆகியோருடன் இணைந்து மகிந்திரா அண்டு முகமது என்ற நிறுவனத்தை நிறிவினார். இந்நிறுவனம் 1948இல் பின்னர், மகிந்திரா அண்டு மகிந்திரா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1] [2]

கைலாசு சந்திர மகிந்திரா
KC Mahindra.jpg
பிறப்பு1894
லூதியானா, பஞ்சாப், இந்தியா
இறப்பு1963
தேசியம்இந்தியா
பணிமகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் இணை நிறுவனர்

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்தொகு

கே.சி என அனைவருக்கும் தெரிந்த இவர் 1894 இல் இந்தியாவின் பஞ்சாப்பின் லூதியானாவில் தனது பெற்றோருக்கு ஒன்பது குழந்தைகளில் இரண்டாவது பிறந்தார். இவர்களின் தந்தை சிறு வயதிலேயே இறந்தபோது, இவரது மூத்த சகோதரர் குடும்பத்தின் தலைவரானார். மேலும் இவர் அவருக்கு சிறந்த நண்பராகவும், எதிர்கால வணிக கூட்டாளருமானார்.

இவர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் பயின்றார். அங்கு இவரது கல்விசார் திறமை பிரகாசித்தது. கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் வளைதடிப் பந்தாட்டம், படகோட்டல் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பட்டம் பெற்ற பிறகு, இவர் மார்ட்டின் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இந்தியா என்ற மாத இதழையும், சிலகாலம், இந்துஸ்தான் ரிவியூ என்ற இதழையும் பதிப்பித்தார்.

தொழில்தொகு

1942 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்காவில் இந்திய கொள்முதல் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1945 இல் இந்தியா திரும்பிய இவர், இந்திய அரசாங்கத்தின் இந்திய நிலக்கரி புலங்கள் குழுவின் தலைவராகவும், தானுந்துத் தொழிற்றுறை மற்றும் உழவு இயந்திரக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். முக்கியமாக நிலக்கரி கொள்கைகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தின் சமீபத்திய முறைகளைப் பயன்படுத்துவதற்கும் இவர் அளித்த பங்களிப்பு தொழில்துறையை வடிவமைக்க உதவியது. மேலும் இவரது நிலக்கரி ஆணைய அறிக்கை தொழில்துறையில் ஒரு முக்கிய ஆவணமாக மாறியது. இந்த ஆண்டுகளில், சர் ராஜேந்திரநாத் முகர்ஜி என்பவரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.

மகிந்திரா அண்டு மகிந்திராதொகு

1946 ஆம் ஆண்டில், மகிந்திரா அண்டு முகமது நிறுவனத்தை நிறுவுவதற்காக இவர் மும்பைக்குச் சென்றார். தலைவராக இவரது 13 ஆண்டுகால தலைமையில் இந்த நிறுவனம் பல துறைகளில் ஒரு பெரிய இந்திய தொழில்துறை இல்லமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்தியாவின் நடுவண் வங்கி, ஏர் இந்தியா, இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராக இவர் பணியாற்றினார்.

மேற்கோள்கள்தொகு

  1. "ET Awards 2008-09: Lifetime Achievement Award- Keshub Mahindra". தி எகனாமிக் டைம்ஸ். 25 August 2009. http://economictimes.indiatimes.com/features/et-awards-2008-09-lifetime-achievement-award--keshub-mahindra/articleshow/4930965.cms. 
  2. Herdeck, p. 209

வெளி இணைப்புகள்தொகு