மாலிக் குலாம் முகமது

சர் மாலிக் குலாம் முகம்மது (Malik Ghulam Muhammad) பாக்கித்தானின் மூன்றாவது ஆளுநராக பணியாற்றிய இவர் பாக்கித்தான் நிதியாளராகவும் இருந்தார். 1951 ஆம் ஆண்டில் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக பதவி நீக்கம் செய்யப்படும் வரை இந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 1945 இல் மகிந்திரா & முகமது (பின்னர் 1948 இல் மகிந்திரா அண்டு மகிந்திரா ) என்ற நிறுவனத்தை ஜகதீசு சந்திர மகிந்திரா மற்றும் கைலாசு சந்திர மகிந்திரா ஆகியோருடன் இணைந்து நிறுவினார்.

மாலிக் குலாம் முகமது

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்த இவர், 1946 இல் லியாகத் அலிகானின் கீழ் நிதி அமைச்சகத்தில் சேர பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, இந்திய இரயில்வேயின் கணக்குச் சேவையில் பட்டயக் கணக்காளராக இந்திய குடிமைப் பணியில் சேர்ந்தார். 1947 இல் இந்தியப் பிரிவினையின் விளைவாக பாக்கித்தான் சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் முதல் நிதியமைச்சராக லியாகத் அலி கான் நிர்வாகத்தில் சேர்ந்தார். அங்கு பாக்கித்தானின் தேசிய பொருளாதாரத்தின் குறைகளை தணிப்பதற்கான முதல் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்க உதவினார்.

1951 இல் பிரதமர் லியாகத் அலி கான் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஅவரை ஆளுநராக கவாஜா நசிமுத்தீன் நியமித்தார். இவர் பிரதமராக பொறுப்பேற்று அரசாங்கத்தை வழிநடத்தினார். டாக்காவில் மொழி இயக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்ட நாடு தழுவிய வன்முறை மற்றும் லாகூரில் நடந்த மதக் கலவரங்கள் நசிமுத்தீனின் நிர்வாகத்தை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. பின்னர் பிரதமர் முகம்மது அலி போக்ரா 1953-54 இல் பாக்கித்தானில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினார். 1955 ஆம் ஆண்டில், ஆளுநர் பதவியில் இருந்து அப்போதைய உள்துறை மந்திரி இசுக்கந்தர் அலி மிர்சாவின் உடல்நிலை மோசமடைந்ததால் இவரை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டார். பின்னர், இவர் தனது நோயுடன் சிறுது காலம் போராடினார், பின்னர் 1956 இல் இறந்தார்.

இவரது தனிப்பட்ட பிம்பத்தை பாக்கித்தானின் வரலாற்றாசிரியர்கள் எதிர்மறையாகக் கருதுகின்றனர். இவர் அரசியல் சூழ்ச்சிக்கு வழிவகுத்ததற்காக விமர்சிக்கப்படுகிறார், பாக்கித்தானில் இராணுவச் சட்டத்தை அங்கீகரித்ததின் மூலம் இராணுவத்தின் மீது பொதுமக்களின் கட்டுப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், மற்றும் பாக்கித்தானின் அரசியலமைப்புச் சட்டமன்றத்தை நீக்கியதன் மூலம் புதிய ஜனநாயக நெறிமுறைகளை மதிப்பிழக்கச் செய்ததாகவும் கூறுகிறார்கள்.[1]

சுயசரிதைதொகு

குடும்ப பின்னணி மற்றும் கல்விதொகு

இவர், மாலிக் குலாம் முகம்மது என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லாகூரில் உள்ள மோச்சி கேட் அருகே ஒரு புறநகர் பகுதியில் பிறந்தார்.

இவர் ஒரு பஞ்சாபி பதான் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் கஷ்டாய் பழங்குடியின் வழிவந்த பஷ்தூன்கள் என்பதால் தூய லாகோரி கலாச்சாரத்தின் தாக்கம் இவரது ஆளுமையில் மிகவும் தெரிந்தது.[2] :xxx தனது குழந்தைப் பருவத்தை லாகூர் நகரத்தில் கழித்தார். லாகூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முகம்மதன் ஆங்லேய-கீழைநாட்டுக் கல்லூரியில் சேர உத்தரபிரதேசத்தின் அலிகார் நகரம் சென்றார். அங்கு, இயற்பியலாளரும் அதிகாரத்துவவாதியுமான நஜீர் அகமதுவின் அறை தோழராக இருந்தார்.[3] அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் இவர் கணக்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் .

நிதி அமைச்சர் (1947–51)தொகு

1946-47ல், இவர் மகிந்திரா அண்டு மகிந்திராவை விட்டு வெளியேறி, நிதி அமைச்சர் லியாகத் அலிகானின் கீழ் அமைச்சரவை செயலாளராக நிதி அமைச்சகத்தில் சேர்ந்தார், இந்தியாவின் முதல் தொழிற்சங்க வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க அவருக்கு உதவினார்.[4]

ஆளுநர் (1951-55)தொகு

1951 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பிரதம மந்திரி லியாகத் அலிகான் இவரது மோசமான உடல்நிலை காரணமாக நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முடிவை எடுத்திருந்தார்.[4] இருப்பினும், அக்டோபர் 1951 இல் பிரதமர் லியாகத் அலிகான் படுகொலை செய்யப்பட்டதால் இந்த முடிவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆளுநர் கவாஜா நசிமுத்தீன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தனது சொந்த அமைச்சரவையில் இவரை சேர்த்துக்கொண்டார்.

இறப்புதொகு

1955 வாக்கில் இவரது உடல் முழுவதும் பக்கவாதம் பரவியதால் இவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, 1955இல் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்று சிகிச்சை பெற இவர் விடுப்பு எடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். [4] இவரது செல்வாக்கால், இவர் உள்துறை மந்திரி இசுகந்தர் மிர்சாவை செயல் ஆளுநராக நியமித்தார். ஆனால் மிர்சா இவரை பதவியில் இருந்து நீக்கினார். அவருக்கு இடமளிக்கும் பொருட்டு, அரசியலமைப்பு சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. 1956 ஆகத்து 29, அன்று, இவர் இறந்து போனார். இவர் கராச்சியில் கிறிஸ்துவர்களின் கல்லறையில், பௌஜி கப்ரிசுதானுக்கு அடுத்ததாக அடக்கம் செய்யப்பட்டார்.[5]

குறிப்புகள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; storyofpakistan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Constitution-making in Asia: Decolonisation and State-Building in the Aftermath of the British Empire. Routledge. https://books.google.com/books?id=GwjeCwAAQBAJ&pg=PT160. 
  3. Military, State and Society in Pakistan. Springer. https://books.google.com/books?id=ZwGIDAAAQBAJ&pg=PA259. 
  4. 4.0 4.1 4.2 "Ghulam Muhammad--Former Governor General of Pakistan". Story Of Pakistan. Lahore, Pakistan: Nazaria-e-Pakistan Trust. 21 October 2013. 24 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ex-Governor General Ghulam Mohammad's anniversary today". Samaa TV. 29 August 2012. https://www.samaa.tv/pakistan/2012/08/ex-governor-general-ghulam-mohammad-s-anniversary-today/. பார்த்த நாள்: 24 March 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிக்_குலாம்_முகமது&oldid=3024463" இருந்து மீள்விக்கப்பட்டது