கொச்சியின் பொருளாதாரம்
கொச்சியின் பொருளாதாரம் வருடத்திற்க்கு கிட்டத்தட்ட 7.5% வளர்ச்சியடைந்து 2012-2013 நிதியாண்டில் 4945329 கோடி மதிப்புள்ளில் இருந்தது.[1]
சுருக்கம்
தொகுகொச்சியின் பொருளாதரத்தை சேவைத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வணிகப் பொருளாதாரமாக வகைப்படுத்தலாம்.[2]கட்டுமானம், உற்பத்தி, கப்பல் கட்டுதல், போக்குவரத்து/கப்பல் போக்குவரத்து, கடல் உணவு மற்றும் மசாலா ஏற்றுமதி, ரசாயணத் தொழில்கள் ,தகவல் தொழில்நுட்பம், சுகாதார சேவைகள் மற்றும் வங்கி ஆகிய முக்கிய வணிகத் துறைகள் அடங்கும்.
முக்கிய தொழில்கள்
தொகுகப்பல் கட்டிடம்
தொகுகொச்சியில் உள்ள கொச்சி கப்பல் தளம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளம்.கொச்சி கப்பல் கட்டும் தளம் 1972 ஆம் ஆண்டு இந்திய அரசு நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.இந்நிறுவனம் தற்போது இந்திய கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் போக்குவரங்து துறையில் முன்னோடியாக உருவெடுத்துள்ளது.கொச்சின் கப்பல் தளம் இந்திய கடற்படைக்கு கப்பல்களையும் உருவாக்குகிறது.
தகவல் தொழில்நுட்பம்
தொகுகேரளாவின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் கொச்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.நாட்டின் தகவல் தொழில்நுட்பம் நிறுவணங்களுக்கு முன்னணி அடுக்கு-2 இலக்கு கொச்சியாகும்.
வரலாறு
தொகுசேர காலத்திற்க்கு முந்தைய வரலாறு
தொகுகொச்சி குலாசேகர சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 1102 இல் குலாசேகர சாம்ராஜ்யத்திலிருத்து கொச்சி சுதந்திரமானது.1341 இல் முசிரிஸ் அழிக்கப்பட்ட பின்னர் இது ஒரு வர்த்தக துறைமுகமாக மூக்கியத்துவம் பெற்றது.இது அரபு,சீன மற்றும் ஐரோப்பிய கடல் வர்த்தகர்களை ஈர்த்தது.சீன மீன்பிடி வலைகள் 1350 முதல் கொச்சியில் பயண்பாட்டில் உள்ளன.
போர்த்துகீசிய காலம்
தொகுபோர்த்துகீசிய வர்த்தகர்கள் மேற்கொண்ட படையெடுப்பு கரணமாக 1500 கொச்சியில் தொழில்சாலை கட்டினர்.கொச்சின் புதிதாக உருவான போர்த்துகீசிய இந்தியாவின் தலைநகராக மாறியது.
டச்சு காலம்
தொகுமார்சு 20, 1663 இல், டச்சு கிழக்கிந்திய கம்பெனி கொச்சின் ராஜா ஒரு ஒப்பதத்தில் கையெழுத்திட்டார்,அதன்படி இராச்சியத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகு மற்றும் இலவங்கப்பட்டை வாங்குவதில் ஏகபோக உரிமையைகொண்டுயிருந்தது.அடுத்த ஆண்டு மற்றொரு ஒப்பந்தம் இறக்குமதி வரி செலுத்துவதி இருந்து நிறுவணத்திற்க்கு விலக்கு அளித்தது.
மேற்க்கோள்
தொகு