கொடிக்குன்னு பகவதி கோயில்

கொடிக்குன்னு பகவதி கோயில் அல்லது கொடிக்குன்னு அம்பலம் என்பது இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பிக்கு அருகில் பள்ளிப்புரம் கிராமத்தில் உள்ளது. இது துர்கா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும் .

கொடிக்குன்னு பகவதி கோயில்

கட்டிடக்கலை

தொகு

இக்கோயில் மூன்று புனித வாயில்களைக் கொண்டுள்ளது.உள்ளே மண்டபத்திற்குள், கோயிலின் மூலவர் அம்மா என்று பொருள் தரும் வகையில் அம்மா என்று குறிப்பிடப்படுகிறார். அதே அளவு முக்கியத்துவத்துடன் சிவன் உள்ளார். மூலவரின் இடது புறத்தில் கணபதி உள்ளார்,.[1]

தோற்றம்

தொகு

கோயிலின் தோற்றமானது அருகிலுள்ள முத்தசியர் காவின் (பாட்டி கோயில்) மூலவரான முத்தசியருடன் தொடர்புடையதாகும். அவரும், கொடிக்குன்னத்தம்மா உள்ளிட்ட அவருடைய மூன்று அழகான மகள்களும் ஒரு கோடைக்கால இரவில் ஆற்றங்கரையில் உலா வந்தனர். அப்போது இளைய மகள் கணக்கன் சமூக நடன விழாவால் ஈர்க்கப்பெற்றாள். நிகழ்வின் முடிவில் அவள் வெளியேற மறுத்ததால், தேவி அவளைக் கணக்கனின் காவல் தெய்வமாக இருக்கும்படி கட்டளையிட்டாள். கணக்கர் காவு உருவாக இது காரணமானதாக இருந்ததாக புராணம் கூறுகிறது.

பின்னர், மற்ற இரண்டு சகோதரிகளும் ஒரு மிருக பலி சடங்கைக் கண்டு தகராறில் ஈடுபட்டனர். இளையவர் சடங்கில் ஈடுபட்டு, இரத்த பலிகளுக்கு பெயர்பெற்ற கொடுங்கல்லூரில் குடியேறினார், மூத்த சகோதரியை கொடிக்குன்னுவில் வாழவிட்டார். இரு சகோதரிகளின் தங்கை மீதான வெறுப்பு காரணமாக கொடுங்கல்லூரை நோக்கிய திசையில் உள்ள அவர்களது கோவில் கதவுகள் மூடப்பட்டது. அதன் விளைவாக கணக்கர்காவு, கொடிக்குன்னு ஆகிய கோயில்களில் தெற்கு வாசல் இல்லாத நிலை ஏற்பட்டது. [1]

விழாக்கள்

தொகு

இக்கோயிலின் முக்கிய விழா சிரங்காரா பூரம் ஆகும். இவ்விழா கொடிக்குன்றத்தம்மா சார்பாக விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மற்றொரு விழா கதிரட்ட வேளா (அறுவடைப் பண்டிகை) ஆகும். அறுவடைக்காக அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.[2]

படத்தொகுப்பு

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Kodikkunnu Bhagavathy Temple History - Story Near Pallipuram - Palakkad". பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
  2. "Chirankara Sree Mahavishnu Temple. Chirankara. Kulamukku. Paruthur Phone 04662238060". Archived from the original on 10 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு