கொடுவா மீன்
கொடுவா மீன் | |
---|---|
![]() | |
கொடுவா மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை |
வரிசை: | பேர்சிஃபார்மீசு |
குடும்பம்: | Latidae |
பேரினம்: | Lates |
இனம்: | L. calcarifer |
இருசொற் பெயரீடு | |
Lates calcarifer (Bloch, 1790) | |
வேறு பெயர்கள் | |
|
கொடுவா மீன் உவர்நீர் மற்றும் கழிமுக நீர் வளங்களில் காணப்படும் சுவை மிகுந்த உப்புநீர் மீனாகும். இது அதிகபடியாக 1.5 மீ. நீளம் வரை வளரக்கூடியதாகும்.
உடல் வடிவமைப்புதொகு
நீள் சதுர வடிவமான உடலின்மேல் பெரிய செதில்களைக் கொண்டது. தலையின் நுனிப்பகுதியில் வாய் உள்ளது. இது பெரியதாக அகன்றும், வெளிநீட்டக்கூடிய வகையிலும் காணப்படுகிறது. வால் உருண்டையாகக் காணப்படுகிறது. உடலின் மேற்பரப்பு சாம்பல் படர்ந்து வெள்ளி நிறமாகவும், அடிப்பரப்பு சற்று வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது. தாடைகள், கன்னம் ஆகிய பகுதிகளில் பற்கள் காணப்படுகின்றன. முதுகுப்புறதில் ஒரு முதுகுப்புறத் துடுப்புக் காணப்படுகிறது. இதில் 7 முதல் 10 வரையிலான துடுப்பு முட்கள் காணப்படுகின்றன. மலவாய்த் துடுப்பில் மூன்று முட்கள் உள்ளன. வால் துடுப்பு பல வடிவங்களில் காணப்படுகிறது.
உணவுப் பழக்கம்தொகு
இம்மீன் ஊன் உண்ணும் பழக்கத்தையும், இறால், நத்தை மற்றும் பிற மீன்களையும் வேட்டையாடும் பழக்கத்தையும் உடையது. இம்மீனின் கொன்றுண்ணும் பழக்கத்தால் இவற்றை மீன் பண்ணைகளில் வளர்ப்பதில்லை.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ ரெங்கராஜன், இரா.(2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 101, 102.