கொட்டகுள்ளி பாக்கியலட்சுமி
கொட்டகுள்ளி பாக்கியலட்சுமி (Kottagulli Bhagya Lakshmi)(பிறப்பு 1984) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.
இளமையும் கல்வியும்
தொகுபாக்கியலட்சுமி 2004ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் படேருவில் பிறந்தார். இவரது தந்தை கொட்டகுள்ளி சிட்டிநாயுடு ஒரு விவசாயி. இவர் 2006ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.[1] நரசிங்க ராவ் என்பவரை மணந்த[2] பாக்கியலட்சுமிக்கு விவேக் வர்தம் என்ற மகனும், ஜசுமிதா சிறீ என்ற மகளும் உள்ளனர்.
அரசியல்
தொகுபாக்கியலட்சுமி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு[3][4] தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தற்போது விசாகப்பட்டினத்தின் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பாடேரு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆந்திர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kottagulli Bhagya Lakshmi(YSRCP):Constituency- PADERU(VISAKHAPATNAM) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
- ↑ "Member's Information - Legislative Assembly - Liferay DXP". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
- ↑ "Paderu Assembly Election Results 2019 Live: Paderu Constituency (Seat) Election Results, Live News". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
- ↑ "LIVE పాడేరు అసెంబ్లీ ఎన్నికలు 2019, Andhra Pradesh | Paderu Assembly Election Result 2019 | Winner MLA, Leading-Trailing Runner-up Candidates List, Vote Margin, Paderu Previous Results". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
- ↑ "YSRC proves a point with 10 women MLAs and 4 MPs". https://timesofindia.indiatimes.com/city/vijayawada/ysrc-proves-a-point-with-10-women-mlas-and-4-mps/articleshow/69471910.cms.
வெளி இணைப்பு
தொகுஆந்திர சட்டமன்றத்தில் கே.பாக்ய லட்சுமி