கொண்டங்கி ஏரி
கொண்டங்கி ஏரி , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மத்திய சிறைச்சாலை எதிரே கேப்பர்மலை எனும் ஊரில் உள்ளது. 18.72 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கப்படும் கொண்டங்கி ஏரியின் பரப்பளவு 188 ஏக்கர் ஆகும். கொண்டங்கி ஏரியின் முப்புறங்களிலும் மலைகள் சூழ்ந்துள்ளது. இது கடலூர் நகரத்திலிருந்து வெள்ளக்கரை செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. [1]
மழைக்காலங்களில் மலைகளிலிருந்து வழிந்தோடி வரும் நீரால் நிரம்பும் கொண்டங்கி ஏரிக்கு, கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட திருவயிந்திபுரம் அணைக்கட்டில் இருந்து பிரியும் ஒரு கிளைக் கால்வாய் வழியாகவும் நீர் கிடைக்கிறது. மேலும் இந்த ஏரிக்குள்ளே இயற்கையான பல நீரூற்றுக் களும் அமைந்துள்ளது.
இதன் சுற்றுப்புற கிராமங்களின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக உள்ள கொண்டங்கி ஏரி, கடலூர் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக கடலூர் புதுநகர் மற்றும் முதுநகர் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
வரலாறு
தொகுகொண்டங்கி ஏரியின் நீரை கடலூர் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய 1870 மற்றும் 1880ல் கடலூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலராக இருந்த மருத்துவர் ஜி. இராபர்ட்சன் திட்டமிட்டு செயல்படுத்தினார். .