கொத்தபேட்டை , ஐதராபாத்து
கொத்தபேட்டை (Kothapet) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரத்திலுள்ள ஒரு பெரிய வணிக மற்றும் குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இது தேசிய நெடுஞ்சாலை 9 இன் ஒரு பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இது ரங்காரெட்டி மாவட்டத்தின் மகேசுவரம் தொகுதிக்குட்பட்டது.
கொத்தபேட்டை | |
---|---|
அண்மைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 17°22′34″N 78°32′46″E / 17.376197°N 78.546053°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
பகுதி | கிழக்கு |
வட்டம் | எல்.பி நகர்/காடியன்னாரம் |
வார்டு | 8 |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 33,684 |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 035 |
வாகனப் பதிவு | TS |
மக்களவைத் தொகுதி | மல்காஜ்கிரி |
சட்டப் பேரவைப் தொகுதி | மகேசுவரம் |
நகரத் திட்டமிடல் நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
வரலாறு
தொகுஆரம்பத்தில் கிராம ஊராட்சியாக இருந்த கொத்தபேட்டை கிராமம், பின்னர் ஐதராபாத்து பெருநகர வளர்ச்சி ஆணையப் பகுதிக்குள் உள்வாங்கப்பட்டது. பின்னர், நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2] இந்த கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து தெலங்காணா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் மனு ரத்து செய்யப்பட்டது. [3]
பொருளாதாரம்
தொகுதெலங்காணா மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய பழச் சந்தைகளில் ஒன்றாக கொத்தப்பேட்டை உள்ளது.[4] இங்கு அசையாச் சொத்து வணிகம் வளர்ந்து வருகிறது.[5] உள்ளூர் வணிகங்கள் காரணமாக ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கொத்தபேட்டை பழச்சந்தையை கொகெடாவுக்கு மாற்ற முன்மொழியப்பட்டது.[6]
போக்குவரத்து
தொகுஐதராபாத்து மெட்ரோ , தெலங்காணா மாநிலப் போக்குவரத்து பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சைதன்யபுரி மெட்ரோ நிலையம் ஆகியவற்றால் இந்த பகுதி நன்கு இணைக்கப்பட்டுள்ளாது[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Election Wards" (PDF). Greater Hyderabad Municipal Corporation. Archived from the original (PDF) on 10 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2017.
- ↑ "Abstract of Govt of Andhra Pradesh order dated 25th Aug 2008" (PDF). www.hmda.gov.in. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 16 May 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
- ↑ "No stay on merger". https://www.deccanchronicle.com/nation/crime/220416/no-stay-on-merger-of-villages-into-greater-hyderabad-municipal-corporation.html.
- ↑ "Fruits flood Hyderabad Markets". http://www.newindianexpress.com/cities/hyderabad/2017/mar/09/ahead-of-summer-fruits-flood-hyderabad-markets-1579339.html.
- ↑ "Kothapet - Realty Compass". Archived from the original on 18 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
- ↑ "Gaddiannaram market to be shifted to Koheda to ease traffic snarls". http://www.newindianexpress.com/cities/hyderabad/2017/mar/23/gaddiannaram-market-to-be-shifted-to-koheda-to-ease-traffic-snarls-1584692.html.
- ↑ "Victoria Memorial - Kothapet Metro Station L&T metro".