கோகா ராமசுவாமி

இந்திய அரசியல்வாதி

கோகா ராமசுவாமி (Goka Ramaswamy) (1933 - 21 மார்ச் 2005) பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார். ராமசாமி 1978 முதல் 1982 வரை ஆந்திரப் பிரதேசத்தில் அமைச்சராகப் பல்வேறு துறைகளை வகித்தார். இவர் 1978 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் கான்பூர் (நிலையம்) சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என். டி. ராமராவ் புதிதாகத் தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி முதல் முறையாக அரசு அமைத்தபோது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் 1983 மற்றும் 1985 க்கு இடையில் காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[1]

கோகா ராமசுவாமி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1978–1985
முன்னையவர்டி. ஹயக்ரீவ சாரி
பின்னவர்போஜப்பள்ளி ராஜையா
தொகுதிகான்பூர் நிலையம்
உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
1978–1980
போக்குவரத்து, மீனவர் நலன், தோட்டக்கலைத் துறை அமைச்சர்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
1980–1982
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1933
ஜன்கோன், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
(தற்போது தெலங்காணா, இந்தியா)
இறப்பு21 மார்ச் 2005 ஐதராபாத்து
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ghanpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகா_ராமசுவாமி&oldid=3820941" இலிருந்து மீள்விக்கப்பட்டது