ஆந்திரப் பிரதேசம் (1956–2014)
ஆந்திரப் பிரதேசம், ஐக்கிய ஆந்திரப் பிரதேசம், பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் அல்லது உம்மடி ஆந்திரப் பிரதேசம் என்பது முன்பு இருந்த மாநிலத்தைக் குறிப்பிடும் பெயர்களாகும். இந்த மாநிலம் இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் மூலம் ஐதராபாத்தைத் தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இது ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மூலம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. தெலங்காணா, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா ஆகிய மூன்று தனித்துவமான பண்பாட்டுப் பகுதிகளால் இந்த மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்காணா முன்பு ஐதராபாத் நிசாம் ஆட்சி செய்த ஐதராபாத் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதே சமயம் இராயலசீமை மற்றும் கடலோர ஆந்திரம் ஆகியவை ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தன. இது முன்னர் பிரித்தானிய இந்தியாவால் ஆளப்பட்ட மதறாஸ் இராசதானியின் ஒரு பகுதியாக இருந்தது.
ஐக்கிய ஆந்திர பிரதேசம் உருவாக்கம்
தொகுமொழிவழி அடையாளத்தின் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்தைப் பெறுவதற்கும், மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பொட்டி சிறீராமுலு 1952-இல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். மதராஸ் சர்ச்சைக்குரிய இடமாக மாறியதால், 1949-இல் ஜே.வி.பி குழு அறிக்கை இ்வ்வாறு கூறியது: "ஆந்திரர்கள் மதராஸ் (தற்போது சென்னை) நகரத்தின் மீதான தங்கள் உரிமைக் கோரலைக் கைவிட்டால் ஆந்திரா மாகாணம் அமைக்கப்படலாம்". பொட்டி சிறீராமுலுவின் மரணத்திற்குப் பிறகு, மதராஸ் மாநிலத்திலிருந்து தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் 1953 நவம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் தலைநகராக கர்னூல் ஆக்கப்பட்டது.[1] நனிநாகரீக உடன்படிக்கையின் அடிப்படையில் 1956 நவம்பர் முதல் நாள் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டமானது ஆந்திரா மாநிலத்தை ஏற்கனவே இருந்த ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளுடன் இணைத்து ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.[2] ஐதராபாத் புதிய மாநிலத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. ஐதராபாத் மாநிலத்தின் மராத்தி மொழி பேசும் பகுதிகள் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. மேலும் கன்னடம் பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அது பின்னர் கருநாடகம் என புதிய பெயரைப் பெற்றது.
2014 பெப்ரவரியில், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மசோதாவானது, பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய தெலங்காணா மாநிலம் அமைப்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநிலங்களுக்கு ஐதராபாத் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் கூட்டுத் தலைநகராக இருக்கும்.[3] இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு 2014 சூன் 2 அன்று புதிய தெலுங்காணா மாநிலம் உருவாக்கப்பட்டது.[4] 2014, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் செல்லுபடி தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் மனுக்கள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் 2014 ஏப்ரல் முதல் தீர்ப்புக்காக நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
- விசாலந்திரா இயக்கம்
விசாலந்திரா அல்லது விசால ஆந்திரா என்பது விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் வாழும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாநிலமாக அதாவது அகன்ற ஆந்திர மாநிலமாக தனியாக உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆகும். தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்தையும் சேர்த்து ஒரே மாநிலமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆந்திர மகாசபா என்ற பதாகையின் கீழ் இந்த இயக்கம் இந்திய பொதுவுடமைக் கட்சியால் வழிநடத்தப்பட்டது.[சான்று தேவை] (இந்திய போதுவுடமைக் கட்சி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரியது.) இந்த இயக்கம் வெற்றியடைந்து, மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக 1956 நவம்பர் முதல் நாள் அன்று ஆந்திர மாநிலத்துடன் ஐதராபாத் இராச்சியத்தின் (தெலுங்கானா) தெலுங்கு பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. (ஆந்திரா மாநிலம் முன்னதாக 1953 அக்டோபர் முதல் நாள் அன்று மதராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இருப்பினும், 2014 சூன் இரண்டாம் நாள் அன்று, தெலுங்காணா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மீண்டும் பிரிக்கப்பட்டது. இதன் முடிவில் விசாலந்திரா சோதனை முடிவுக்கு வந்தது. எஞ்சியிருக்கும் ஆந்திரப் பிரதேசம் இப்போது தோராயமாக அதே எல்லைகளைக் கொண்டுள்ளது.
ஐக்கிய ஆந்திர பிரதேச ஆளுநர்கள்
தொகுஆந்திர பிரதேச மாநில இணையமுகப்பில் இருந்து தரவு .[5]
- முதன்மைக் கட்டுரை ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
# | பெயர் | உருவப்படம் | பதவி ஏற்பு | பதவி முடிவு | கால நீளம் |
---|---|---|---|---|---|
1 | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | 1 நவம்பர் 1956 | 1 ஆகத்து 1957 | 1,005 நாட்கள் | |
2 | பீம் சென் சச்சார் | 1 ஆகத்து 1957 | 8 செப்டம்பர் 1962 | 1,865 நாட்கள் | |
3 | சத்யவந்த் மல்லண்ணா சிறீநாகேசு | 8 செப்டம்பர் 1962 | 4 மே 1964 | 605 நாட்கள் | |
4 | பட்டம் தாணு பிள்ளை | 4 மே 1964 | 11 ஏப்ரல் 1968 | 1,439 நாட்கள் | |
5 | கந்துபாய் கசன்ஜி தேசாய் | – | 11 ஏப்ரல் 1968 | 25 சனவரி 1975 | 2,481 நாட்கள் |
6 | எஸ். ஓபுல் ரெட்டி | – | 25 சனவரி 1975 | 10 சனவரி 1976 | 351 நாட்கள் |
7 | மோகன் லால் சுகாதியா | 10 சனவரி 1976 | 16 சூன் 1976 | 159 நாட்கள் | |
8 | இராமச்சந்திர தோண்டிபா பண்டாரி | – | 16 சூன் 1976 | 17 பெப்ரவரி 1977 | 247 நாட்கள் |
9 | பி. ஜே. திவான் | – | 17 பெப்ரவரி 1977 | 5 மே 1977 | 78 நாட்கள் |
10 | சாரதா முகர்ஜி | – | 5 மே 1977 | 15 ஆகத்து 1978 | 468 நாட்கள் |
11 | கே. சி. ஆபிரகாம் | – | 15 ஆகத்து 1978 | 15 ஆகத்து 1983 | 1,827 நாட்கள் |
12 | தாக்கூர் ராம் லால் | 15 ஆகத்து 1983 | 29 ஆகத்து 1984 | 381 நாட்கள் | |
13 | சங்கர் தயாள் சர்மா | 29 ஆகத்து 1984 | 26 நவம்பர் 1985 | 455 நாட்கள் | |
14 | குமுத்பென் மணிசங்கர் ஜோஷி | – | 26 நவம்பர் 1985 | 7 பெப்ரவரி 1990 | 1,535 நாட்கள் |
15 | கிருஷண் காந்த் | 7 பெப்ரவரி 1990 | 22 ஆகத்து 1997 | 2,754 நாட்கள் | |
16 | கோபால ராமானுஜம் | – | 22 ஆகத்து 1997 | 24 நவம்பர் 1997 | 95 நாட்கள் |
17 | சி. ரங்கராஜன் | 24 நவம்பர் 1997 | 3 சனவரி 2003 | 1,867 நாட்கள் | |
18 | சுர்சித் சிங் பர்னாலா | 3 சனவரி 2003 | 4 நவம்பர் 2004 | 672 நாட்கள் | |
19 | சுசில்குமார் சிண்டே | 4 நவம்பர் 2004 | 29 சனவரி 2006 | 452 நாட்கள் | |
20 | இராமேசுவர் தாக்கூர் | 29 சனவரி 2006 | 22 ஆகத்து 2007 | 571 நாட்கள் | |
21 | நா. த. திவாரி | 22 ஆகத்து 2007 | 27 திசம்பர் 2009 | 859 நாட்கள் | |
22 | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் | 28 திசம்பர் 2009 | 1 சூன் 2014 | 1,617 நாட்கள் |
ஐக்கிய ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் பட்டியல்
தொகு1956 நவம்பர் முதல் நாளில், ஐதராபாத் இராச்சியம் இல்லாமல் போனது; அதன் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதன் மீதமுள்ள தெலுங்கு பேசும் பகுதியான தெலங்காணா, ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவானது.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நா. சந்திரபாபு நாயுடு ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் நல்லாரி கிரண் குமார் ரெட்டி ஐக்கிய ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்தார்.
எண். | உருவப்படம் | பெயர் | தொகுதி | பதவிக்காலம் | சட்டமன்றம்
(தேர்தல்) |
கட்சி | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
துவக்கம் | முடிவு | பதவியில் இருந்த காலம் | |||||||
1 | நீலம் சஞ்சீவ ரெட்டி | ஸ்ரீகாளஹஸ்தி | 1 நவம்பர் 1956 | 11 சனவரி 1960 | 3 ஆண்டுகள், 71 நாட்கள் | 1st
(1955 தேர்தல்) |
இந்திய தேசிய காங்கிரசு | ||
2வது
(1957 தேர்தல்) | |||||||||
2 | தாமோதரம் சஞ்சீவய்யா | கர்நூல் | 11 சனவரி 1960 | 12 மார்ச் 1962 | 2 ஆண்டுகள், 60 நாட்கள் | ||||
(1) |
நீலம் சஞ்சீவ ரெட்டி | தோன் | 12 மார்ச் 1962 | 20 பெப்ரவரி 1964 | 2 ஆண்டுகள், 8 நாட்கள் | 3வது
(1962 தேர்தல்) | |||
3 | காசு பிரம்மானந்த ரெட்டி | நரசராவ்பேட்டை | 21 பெப்ரவரி 1964 | 30 செப்டம்பர் 1971 | 7 ஆண்டுகள், 221 நாட்கள் | ||||
4வது
(1967 தேர்தல்) | |||||||||
4 | பி. வி. நரசிம்ம ராவ் | மாந்தானி | 30 செப்டம்பர் 1971 | 10 சனவரி 1973 | 1 ஆண்டு, 102 நாட்கள் | ||||
5வது
(1972 தேர்தல்) | |||||||||
– | காலி (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
N/A | 11 சனவரி 1973 | 10 திசம்பர் 1973 | 333 நாட்கள் | N/A | |||
5 | ஜலகம் வெங்கல ராவ் | வெம்சூர் | 10 திசம்பர் 1973 | 6 மார்ச் 1978 | 4 ஆண்டுகள், 86 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | |||
6 | மாரி சன்னா ரெட்டி | மெட்சல் | 6 மார்ச் 1978 | 11 அக்டோபர் 1980 | 2 ஆண்டுகள், 219 நாட்கள் | 6வது
(1978 தேர்தல்) | |||
7 | தங்குதுரி அஞ்சய்யா | சட்ட மேலவை | 11 அக்டோபர் 1980 | 24 பெப்ரவரி 1982 | 1 ஆண்டு, 136 நாட்கள் | ||||
8 | பவனம் வெங்கடராமி ரெட்டி | சட்ட மேலவை | 24 பெப்ரவரி 1982 | 20 செப்டம்பர் 1982 | 208 நாட்கள் | ||||
9 | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | கர்நூல் | 20 செப்டம்பர் 1982 | 9 சனவரி 1983 | 111 நாட்கள் | ||||
10 | என். டி. ராமராவ் | திருப்பதி | 9 சனவரி 1983 | 16 ஆகத்து 1984 | 1 ஆண்டு, 220 நாட்கள் | 7வது
(1983 தேர்தல்) |
தெலுங்கு தேசம் கட்சி | ||
11 | என். பாஸ்கர ராவ் | வெமுரு | 16 ஆகத்து 1984 | 16 செப்டம்பர் 1984 | 31 நாட்கள் | ||||
(10) | என். டி. ராமராவ் | இந்துப்பூர் | 16 September 1984 | 9 March 1985 | 5 ஆண்டுகள், 77 நாட்கள் | ||||
9 மார்ச் 1985 | 2 திசம்பர் 1989 | 8th
(1985 தேர்தல்) | |||||||
(6) | மாரி சன்னா ரெட்டி | சனத்நகர் | 3 திசம்பர் 1989 | 17 திசம்பர் 1990 | 1 ஆண்டு, 14 நாட்கள் | 9வது
(1989 election) |
இந்திய தேசிய காங்கிரசு | ||
12 | என். ஜனார்த்தன ரெட்டி | வேங்கடகிரி | 17 திசம்பர் 1990 | 9 அக்டோபர் 1992 | 1 ஆண்டு, 297 நாட்கள் | ||||
(9) | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | பன்யம் | 9 அக்டோபர் 1992 | 12 திசம்பர் 1994 | 2 ஆண்டுகள், 64 நாட்கள் | ||||
(10) | என். டி. ராமராவ் | இந்துப்பூர் | 12 திசம்பர் 1994 | 1 செப்டம்பர் 1995 | 263 நாட்கள் | 10வது
(1994 தேர்தல்) |
தெலுங்கு தேசம் கட்சி | ||
13 | நா. சந்திரபாபு நாயுடு | குப்பம் | 1 September 1995 | 11 October 1999 | 8 ஆண்டுகள், 255 நாட்கள் | ||||
11 அக்டோபர் 1999 | 13 மே 2004 | 11வது
(1999 தேர்தல்) | |||||||
14 | எ. சா. ராஜசேகர ரெட்டி | புலிவெந்துலா | 14 மே 2004 | 20 மே 2009 | 5 ஆண்டுகள், 111 நாட்கள் | 12th
(2004 election) |
இந்திய தேசிய காங்கிரசு | ||
20 மே 2009 | 2 செப்டம்பர் 2009 | 13வது | |||||||
15 | கொனியேட்டி ரோசையா | சட்ட மேலவை | 3 செப்டம்பர் 2009 | 24 நவம்பர் 2010 | 1 ஆண்டு, 82 நாட்கள் | ||||
16 | கிரண் குமார் ரெட்டி | பீலேறு | 25 நவம்பர் 2010 | 1 மார்ச் 2014 | 3 ஆண்டுகள், 96 நாட்கள் | ||||
– | காலி[a] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
N/A | 2 மார்ச் 2014 | 1 சூன் 2014 | 91 நாட்கள் | N/A |
ஐக்கிய ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர்கள் பட்டியல்
தொகுஇந்தியாவின் முன்னாள் மாநிலமான ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர்களின் பட்டியலில் பின்வருவ்வர்கள் அடங்குவர்:
விசைகள்: இதேகா
எண். | உருவப்படம் | பெயர் | பதவியேற்பு | பதவி முடிவு | அரசியல் கட்சி | முதலமைச்சர் | |
---|---|---|---|---|---|---|---|
1 | கொண்டா வெங்கட ரங்கா ரெட்டி | 1959 | 1962 | இந்திய தேசிய காங்கிரசு | நீலம் சஞ்சீவ ரெட்டி | ||
2 | ஜேவி நரசிங் ராவ் | 1967 | 1972 | இந்திய தேசிய காங்கிரசு | காசு பிரம்மானந்த ரெட்டி | ||
3 | சி. ஜகந்நாத ராவ் | 24 பெப்ரவரி 1982 | 20 செப்டம்பர் 1982 | இந்திய தேசிய காங்கிரசு | பவனம் வெங்கடராமி ரெட்டி | ||
4 | கோனேரு ரங்க ராவ் | 9 அக்டோபர் 1992 | 12 திசம்பர் 1994 | இந்திய தேசிய காங்கிரசு | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | ||
5 | தாமோதர ராஜ நரசிம்மர் | 10 ஜூன் 2011 [7] | 1 பிப்ரவரி 2014 [8] | இந்திய தேசிய காங்கிரசு | என். கிரண் குமார் ரெட்டி |
தெலுங்கானா உருவாக்கம்
தொகுபல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், ஒன்றிய அரசு, அப்போதிருந்த ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்து, 2014 சூன் முதல் நாள் அன்று, ஒன்றிய அமைச்சரவை ஒருதலைப்பட்சமாக தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. தெலங்கானா தனிமாநிலக் கோரிகையானது ஏறக்குறைய 5 தசாப்தங்களாக நீடித்தது, இது தென்னிந்தியாவில் மிகவும் நீண்டகாலம் நீடித்த இயக்கங்களில் ஒன்றாகும். 2014 பெப்ரவரி 18 அன்று, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 20 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவின்படி, ஐதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக இருக்கும், அதே சமயம் அந்த நகரம் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராகவும் இருக்கும். தற்போது, ஐதராபாத் கூட்டுத் தலைநகராக உள்ளது. 2014 சூன் இரண்டாம் நாள் தெலுங்கானா உருவாக்கப்பட்டது.
தெலுங்கானா இயக்கம் என்பது இந்தியாவில் ஏற்கனவே இருந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா என்ற மாநிலத்தை பிரித்து உருவாக்க நடந்த இயக்கத்தைக் குறிக்கிறது. பழைய சமஸ்தானமான ஐதராபாத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளுடன் புதிய தெலங்கானா மாநிலம் ஒத்திருக்கிறது.
மேலும் பார்க்கவும்
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ குடியரசுத் தலைவர் ஆட்சி may be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[6]
குறிப்புகள்
தொகு- ↑ "Post-Independence Era, then and now". aponline.gov.in. Archived from the original on 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 3 August 2013.
- ↑ "Know Hyderabad: History". Pan India Network. 2010. Archived from the original on 21 September 2010. பார்க்கப்பட்ட நாள் 5 October 2010.
- ↑ "The Andhra Pradesh Reorganisation Act, 2014" (PDF). India Code Legislative Department. Ministry of Law and Justice. 1 March 2014. p. 2. Archived from the original (PDF) on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
- ↑ "Telangana State to Be Born on June 2". Archived from the original on 6 July 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2020.
- ↑ "List of Governors". AP State Portal. Government of Andhra Pradesh. Archived from the original on 27 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 March 2005.
- ↑ . 11 June 2011.
- ↑ . 28 February 2014.