பீம் சென் சச்சார்

பீம் சென் சச்சார் (Bhim Sen Sachar) (1894 திசம்பர் 1 [2] - 1978 சனவரி 18 [3] ) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மூன்று முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் .

பீம் சென் சச்சார்
பஞ்சாபின் இரண்டாவது முதல்வர்
பதவியில்
1949 ஏப்ரல் 13 – 1949 அக்டோபர் 18
முன்னவர் கோபி சந்த் பார்கவா
பின்வந்தவர் கோபி சந்த் பார்கவா
பதவியில்
1952 ஏப்ரல் 17 – 1956 சனவரி 23
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் பர்தாப் சிங் கைரோன்
பஞ்சாப் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
1940–1946
முன்னவர் கோபி சந்த் பார்கவா
பின்வந்தவர் இப்திகார் உசேன் கான் மம்தோட்
ஒடிசாவின் 5ஆவது ஆளுநர்
பதவியில்
1956 செப்டம்பர் 12 – 1957 சூலை 31
முன்னவர் பி. எஸ். குமாரசுவாமி ராஜா
பின்வந்தவர் ஒய்.என்.சுதாங்கர்
ஆந்திராவின் ஆளுநர்
பதவியில்
1957–1962
முன்னவர் சந்துலால் மாதவ்லால் திரிவேதி
பின்வந்தவர் எஸ்.எம்.சிறீநாகேஷ்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 1, 1894(1894-12-01)
பெசாவர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்) [1]
இறப்பு 18 சனவரி 1978(1978-01-18) (அகவை 83)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
தொழில் அரசியல்வாதி

சுயசரிதை தொகு

சச்சார் 1894 திசம்பர் 1 அன்று பிறந்தார். இவர் லாகூரில் இளங்கலை பட்டமும், சட்டத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார். இப்போது பாக்கித்தானில் இருக்கும் குஜ்ரான்வாலாவில் சட்டப் பயிற்சி மேற்கொண்டார். [4] சுதந்திர இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர், இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1921இல் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இவர் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார்.

முதலமைச்சராக தொகு

1949இல், கட்சி இவரை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தது. இவர் 1949 ஏப்ரல் 13 அன்று பதவியேற்று 1949 அக்டோபர் 18 வரை அப்பதவியில் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல்கள் 1952 இல் நடைபெற்றது, அந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாகாணத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது, சச்சார் 1952 ஏப்ரல் 17 முதல் 1956 சனவரி 23 வரை மீண்டும் முதல்வராகப் பணியாற்றினார். [5]

ஆளுநராக தொகு

உள் கட்சி அரசியல் காரணமாக இவர் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒடிசாவின் ஆளுநராக ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். 1956 முதல் 1957 வரை ஆளுநராக பணியாற்றினார். பின்னர் ஆந்திராவின் ஆளுநராக 1957 முதல் 1962 வரை பணியாற்றினார்.

கைது நடவடிக்கை தொகு

நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தி ஆகியோரின் அதிகரித்துவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக பேசிய காரணத்தால் காங்கிரசு கட்சியின் வேறு சில அதிருப்தி தலைவர்களுடன் பழைய உறுப்பினரான இவரும் கைது செய்யப்பட்டார். . [6]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சச்சார் தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவரது மகன், ராஜீந்தர் சச்சார் (பி. 1923) தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். [7] மேலும் பிரபல சச்சார் குழுவின் தலைவராகவும் இருந்தார். இது இந்தியாவில் மத சிறுபான்மையினரின் நிலை குறித்த அறிக்கையை தயாரித்தது. .மூத்த இந்திய பத்திரிகையாளரும், இடதுசாரி ஆர்வலரும் மற்றும் அமைதி ஆர்வலரும் குல்தீப் நாய்யர் சச்சாரின் மருமகன் ஆவார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்_சென்_சச்சார்&oldid=2986024" இருந்து மீள்விக்கப்பட்டது