சந்துலால் மாதவ்லால் திரிவேதி
சர் சந்துலால் மாதவ்லால் திரிவேதி (Sir Chandulal Madhavlal Trivedi) (பிறப்பு: 1893 சூலை 2 - இறப்பு 1980 மார்ச் 15) இவர் 1947 ஆம் ஆண்டு இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தின் (பின்னர் கிழக்கு பஞ்சாப்) முதல் இந்திய ஆளுநராக பணியாற்றிய ஓர் இந்திய நிர்வாகியும் அரசு ஊழியருமாவார். பின்னர் 1953 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஆந்திராவின் முதல் ஆளுநராக 1957 வரை பணியாற்றினார்.
சர் சந்துலால் மாதவ்லால் திரிவேதி | |
---|---|
சந்துலால் மாதவ்லால் திரிவேதி | |
ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 1 ஏப்ரல் 1946 – 14 ஆகத்து 1947 | |
முன்னையவர் | ஹாவ்தோர்ன் லூயிஸ் |
பின்னவர் | கைலாசு நாத் கட்சு |
பஞ்சாப் ஆளுநர் (இந்தியா) | |
பதவியில் 15 ஆகத்து 1947 – 11 மார்ச் 1953 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | சர் சந்தேஸ்வர் பிரசாத் நாராயண் சிங் |
ஆந்திராவின் ஆளுநர் | |
பதவியில் 1 அக்டோபர் 1953 – 1 ஆகத்து 1957 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பீம் சேன் சச்சார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கப்பத்வஞ்ச், கய்ரா மாவட்டம், மும்பை மாகாணம், பிரிட்டீசு இந்தியா (தற்போது கேதா மாவட்டம், குசராத்து, இந்தியா) | 2 சூலை 1893
இறப்பு | 15 மார்ச்சு 1980 கப்பத்வஞ்ச், கய்ரா மாவட்டம் (தற்போது கேதா மாவட்டம், குசராத்து, இந்தியா | (அகவை 86)
துணைவர் | குசும்பென் சுனிலால் திரிவேதி |
வாழ்க்கை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை
தொகுதிரிவேதி கெய்ரா (இப்போது கெடா) மாவட்டத்தில் கபத்வஞ்ச் என்ற இடத்தில் பிறந்து, பின்னர் பிரிட்டிசு இந்தியாவின் பம்பாய் மாகாணத்திலும் இப்போது குஜராத்திலும் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்திலும் , ஆக்ஸ்போர்டு செயின்ட் ஜான்ஸ் கல்லூரியிலும் தனது படிப்பை முடித்த பின்னர், இவர் 1916 இல் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபரில் ஆட்சிப்பணிக்கு நியமிக்கப்பட்டார். 1917 திசம்பரில் இந்தியா திரும்பினார். [1]
இவர் முதன்முதலில் மத்திய மாகாணங்களில் உதவி ஆணையராகவும் (1924 சனவரி முதல் துணை ஆணையராக பணியாற்றினார்), மற்றும் மாகாண தொழில்துறை இயக்குநராகவும், 1926 நவம்பர் முதல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் பணியாற்றினார். 1927 மார்ச்சில், திரிவேதி ஒரு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு, 1932 மே மாதத்தில் துணைச் செயலாளராக இந்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டார். [1] 1934 ஏப்ரலில் இவர் இணைச் செயலாளர் பதவிக்கு முன்னேறினார். பின்னர் 1937 அக்டோபரில் மத்திய மாகாணங்களின் தலைமைச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக, நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, திரிவேதி 1942 மார்ச்சில் மத்திய அரசாங்கத்தில் கூடுதல் செயலாளராக (போர்) பதவி உயர்வு பெற்றார். அதே வருடம் சூலையில் செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திரிவேதி 1945 இன் பிற்பகுதியில் ஒடிசாவின் முதல் இந்திய மற்றும் கடைசி பிரிட்டிசு ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1946 ஏப்ரலில் இவர் ஆளுநராக முறையாக பணியேற்றார், பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய நாள் 1947 ஆகஸ்ட் 14 வரை பணியாற்றினார். அதே நாளில், இவர் புதிய இந்திய மாகாணமான கிழக்கு பஞ்சாபின் முதல் இந்திய ஆளுநராக நியமிக்கப்பட்டார் (அதன் ஒரு பகுதி இப்போது அரியானா ).
சுதந்திரத்திற்குப் பிறகு, பிற்கால வாழ்க்கை
தொகுபிரிவினையை அடுத்து, பிரிக்கப்படாத பஞ்சாபின் முன்னாள் மாகாண தலைநகரான லாகூருடன், (இப்போது பாக்கித்தான்) திரிவேதி கிழக்கு பஞ்சாபின் ஆளுநராக பொறுப்பேற்றவுடன் உடனடியாக பல சவால்களை எதிர்கொண்டார். இவரது அமைச்சர்கள் அலுவலகங்கள், எழுத்தர் ஊழியர்கள் அல்லது தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் இல்லாமல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அனைத்து தொலைபேசி மற்றும் தந்தி இணைப்புகளும் லாகூர் வழியாக மட்டுமே செல்லப்படுவதால், தில்லியுடன் நேரடி தொடர்பு கொள்ள முடியவில்லை. 1947 இலையுதிர்காலத்தில் இப்பகுதி முழுவதும் பரவிய வகுப்புவாத படுகொலைகளை அரசாங்கம் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மேலும், பாக்கித்தானில் இருந்து கிழக்கு பஞ்சாபிற்கு இந்து மற்றும் சீக்கிய அகதிகள் பெருமளவில் வருவதை எதிகொள்ள திரிவேதி கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார். [2]
திரிவேதி 1950 முதல் 1953 வரை மறுபெயரிடப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தார். [3] பின்னர் 1953 இல் உருவாக்கப்பட்ட ஆந்திராவின் முதல் ஆளுநராக [4] 1953 அக்டோபர் 1 முதல் 1957 ஆகத்து 1 வரை பணியாற்றினார்.
இவர் 1957 அக்டோபர் 28 முதல் 1963 திசம்பர் 1 வரை இந்திய திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தார் [1] பரணிடப்பட்டது 2019-11-13 at the வந்தவழி இயந்திரம் 1963 செப்டம்பர் 22 முதல் 1963 திசம்பர் 2வரை இந்திய திட்டக் குழு துணைத் தலைவர் இருந்தார். [5] 1967 பிப்ரவரி முதல் அக்டோபர் 1973 வரை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
ஓய்வு பெற்ற பின்னர், தனது வாழ்நாள் முழுவதையும் தனது சொந்த ஊரில் கழித்தார். அங்கு இவர் 1980 மார்ச் 15, அன்று தனது 86 ஆம் வயதில் இறந்தார். [6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் கபத்வஞ்ச் பகுதியைச் சேர்ந்த குசும்பென் சுனிலால் என்பவரை மணந்தார். இந்தியாவில் பொது சேவைக்காக 1900 மற்றும் 1947 க்கு இடையில் பிரிட்டிசு பேரரசர்/பேரரசி வழங்கிய கைசர்-இ-ஹிந்த் என்ற பதக்கம் 1947 ஆகத்து 14 இல் குசும்பென்னுக்கு வழங்கப்பட்டது.[7]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 The India Office and Burma Office List: 1945. Harrison & Sons, Ltd. 1945. p. 361.
- ↑ Midnight's Furies: The Deadly Legacy of India's Partition. Houghton Mifflin Harcourt. 2015. pp. 140–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-547-66924-3.
{{cite book}}
:|first=
missing|last=
(help) - ↑ List of Governors of Punjab (India)
- ↑ List of Governors of Andhra Pradesh
- ↑ List of deputy chairpersons of the planning commission of India
- ↑ Land and People of Indian States and Union Territories in 36 Volumes: Volume 9 (Haryana). Kalpaz Publications. 2006. p. 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7835-365-2.
- ↑ "No. 38161". இலண்டன் கசெட் (Supplement). 30 December 1947. p. 32.