கோடகநல்லூர்
கோடகநல்லூர் (Kodaganallur) என்பது இந்திய மாநிலமான தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமமாகும். இது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி மாநில நெடுஞ்சாலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1]
கோடகநல்லூர் | |
---|---|
கோடகநல்லூர், திருநெல்வேலி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 8°41′48″N 77°35′22″E / 8.6966°N 77.5895°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஏற்றம் | 70.2 m (230.3 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அருகிலுள்ள ஊர்கள் | சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல் |
மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி |
சட்டமன்றத் தொகுதி | திருநெல்வேலி |
கோயில்கள்
தொகுஇது 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில்களைக் கொண்டுள்ளது - ஸ்ரீ பிரம்மாதாவன் என்ற விஷ்ணு ஆலயமும், ஸ்ரீஅபிமுக்தேசுவரர், ஸ்ரீ கைலாசநாதர் என்ற சிவாலயமும் இங்குள்ளது. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், செவ்வாய் தலமாகவும் கருதப்படுகிறது.
ஸ்ரீ அபிமுக்தேசுவரர்
தொகுஇந்த கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன்: அபிமுக்தேசுவரர் சுவாமி மற்றும் இறைவி சௌந்தரவள்ளி அம்பாள் ஆவர். இந்தக் கோயிலின் சிவலிங்கம் பானலிங்கக் கல்லால் செய்யப்பட்டது. இது ஒரு பெரிய துறவியான கங்காதர சுவாமிகள் என்பவரால் வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. கங்காதர சுவாமிகளின் ஜீவ சமாதியை கோயிலின் அருகிலுள்ள நதிக் கரையில் காணலாம். ஐந்து பிள்ளையார் சிலைகள், ஐந்து பானலிங்கம், மூன்று குருக்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கே கோவிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே கோவிலில் மூன்று குருக்கள்
தொகுஸ்ரீ மகாதேவ சுவாமிகள் ஜீவ சமாதி மேற்கு நோக்கி ஆற்றின் அருகேயும், கிழக்கு நோக்கி பெரிய பிள்ளையாரும், அடுத்ததாக ஸ்ரீ சங்கரர் சிலையும் அமைந்துள்ளன. கோவிலில் தெற்கே ஸ்ரீ தட்சணாமூர்த்தியும் அமைந்துள்ளார்.
ஆதிசங்கரர் மடம்
தொகுஸ்ரீ ஆதிசங்கரர் மடம் அருகிலேயே அவிமுக்தீஸ்வரர் கோயில் இருந்தது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
வெளி இணைப்புகள்
தொகு- கோடகநல்லூரில் வலைத்தளம்
- YOKE (யூத் ஆஃப் கோடகனல்லூர் எண்டெவர்) என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு இப்போது கிராமத்தின் குழந்தைகளுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் கல்வி கற்பிக்கிறது
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.