கோடூர், மலப்புறம்
கோடூர் (Kodur, Malappuram) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரத்தின் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊர் மற்றும் மலப்புறத்தின் புறநகர்ப் பகுதி ஆகும்.
கோடூர் | |
---|---|
கணக்கெடுப்பில் உள்ள ஊர் | |
ஆள்கூறுகள்: 11°1′0″N 76°4′0″E / 11.01667°N 76.06667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 33,790 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676504 |
தொலைபேசி குறியீடு | 91-483 |
வாகனப் பதிவு | KL-53 |
அருகில் உள்ள நகரம் | மலப்புறம் |
மக்களவைத் தொகுதி | மலப்புறம் |
சட்டமன்றத் தொகுதி | மலப்புறம் |
காலநிலை | குளிர்ந்த (கோப்பென்) |
கோடூர் கிராம ஊராட்சி சுமார் 19 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. தாணிக்கல் என்ற வார்டில் கோடூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. இது வடக்கு கேரளப் பிராந்தியத்தைச் சேர்ந்தது. இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மலப்புறத்தின் தெற்கே ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 346 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மலப்புரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் மலப்புறம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது ஆகும். [1]
மக்கள்தொகையியல்
தொகு2001[update] இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, கோடூரின் மொத்த மக்கள் தொகை 33790 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 16534 என்றும், பெண்களின் எண்ணிக்கை 17256 என்றும் உள்ளது.[1]
தொடருந்து
தொகுகோடூருக்கு 10 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் எந்த தொடர்ந்து நிலையமும் இல்லை. இப்பகுதியின் முக்கிய தொடருந்து நிலையமான கோழிக்கோடு தொடருந்து நிலையம் இங்கிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது.
வங்கிகள்
தொகு- கோடூர் நகர கூட்டுறவு ஊரக வங்கி மேற்குகோடூர்
- கூட்டுறவு வங்கி வலியத்
- கேரள கிராமிய வங்கி தாணிக்கல்
- கூட்டுறவு வங்கி செம்மன்கடவு
- கூட்டுறவு வங்கி நூறடி
- கூட்டுறவு வங்கி உம்மத்தூர்
- கூட்டுறவு வங்கி மேற்கு கோடூர்
அரசு அலுவலகங்கள்
தொகு- தாணிக்கல் ஊராட்சி அலுவலகம்
- பொது சுகாதார மையம் தாணிக்கல்
- வேளாண் அலுவலகம் தாணிக்கல்
- அஞ்சல் நிலையம் செம்மன்கடவு
- செம்மன்கடவு கிராம அலுவலகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.