கோந்தாழி திரிதம் தளி சிவன்-பார்வதி கோயில்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோயில்

கோந்தாழி திரிதம் தளி சிவன்-பார்வதி கோயில் (Kondazhy Thrithamthali Siva-Parvathy Temple) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தின் கோந்தாழியில், பாரதப்புழா ஆற்றின் துணையாறான காயத்ரிப்புழாவின் கரையில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயில்|இந்து கோயிலாகும். இந்தக் கோயில் கொச்சி இராச்சியத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். புராணங்களின் படி, பரசுராமர் நீலா ஆற்றின் (பாரதப்புழா) தென் கரையில் ஒரு சிவன் சிலையை நிறுவினார். [1] கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.[2]

கோந்தாழி திரிதம் தளி சிவன் ஆலயம்
கோயிலின் நாலம்பலம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:கோந்தாழி
ஆள்கூறுகள்:10°42′55″N 76°24′13″E / 10.7151981°N 76.4035008°E / 10.7151981; 76.4035008
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

வரலாறு தொகு

சேர ஆட்சியின் போது, ​​கேரளா நிர்வாகத்திற்காக பதினெட்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அடுக்கும் ஒரு பெரிய கோயில் (சிவன் கோயில்) தலைமையில் அமைந்தது. இவற்றில், இந்தக் கோயில் அதன் மையக் கோயிலாகும். வளாகத்தில் தேவிக்கு பார்வதி அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு கோயில் உள்ளது. மேலும் சிவனின் மூன்று மகன்களான பிள்ளையார், சுப்ரமணியன், அய்யப்பன் உட்பட, மகா விஷ்ணு, பத்ரகாளி, நவக்கிரகங்கள், அனுமன், நாக தேவதைகள், பிரம்ம ராட்சசர்கள் போன்ற 11 துணை தெய்வங்களும் உள்ளன.

திப்பு தாக்குதல் தொகு

திப்பு சுல்தானின் வெற்றிக் காலத்தில் கேரளா மீது படையெடுத்தபோது இந்த கோயில்அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக, கோவிலின் சிற்பம் உடைக்கப்பட்டுள்ளது [3][4].

மேலும் காண்க தொகு

படங்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "108 Shiva temples of Kerala". www.shaivam.org.
  2. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". www.vaikhari.org.
  3. "Kondazhy Grama Panchayath - History: A Local Government Institution, Thrissur District, Kerala". www.lsgkerala.in. Archived from the original on 2019-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
  4. Logan, William (2006). Malabar Manual, Mathrubhumi Books, கோழிக்கோடு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8264-046-7