கோபசந்திரம் வெங்கட்ரமணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கோபசந்திரம் வெங்கட்ரமணசாமி கோயில் அல்லது தட்சிண திருப்பதி என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி ஒசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கோபசந்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வெங்கட்ரமணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:கோபசந்திரம், ஓசூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கட்ரமணசாமி
சிறப்புத் திருவிழாக்கள்:4ம் சனி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கோயில்பற்றிய கதை தொகு

ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டகுட்டை என்ற சிற்றுரில் அண்ணன் தம்பி என இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தனர். இருவரும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களாக இருந்தனர். இதில் அண்ணன் கால்நடையாக நடந்து திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்து வருவார். அண்ணன் வந்தபிறகு தம்பி கால்நடையாக திருப்பதி பெருமாளை சேவிக்கப் புறப்படுவார். இவ்வாறு மாறிமாறி இருவரும் திருப்பதி சென்றுவருவர். இவ்வாறான நிலையில் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் திருவேங்கடவனை தரிசிக்க இயலவில்லையே என வருந்தினார். ஒரு நாள் அண்ணனின் கனவில் தோன்றிய வேங்கடவன் உன் பக்திக்கு இணங்க நீ வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே சுயம்புவாக எழுந்தருள்வதாக கூறினார். இந்திலையில் ஆநிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தம்பி ஒரு மாடுமட்டும் மாலைவேளைகளில் ஒரு புதருக்குள் சென்று மறைவதைக் கண்டு அண்ணனிடமும், ஊராரிடம் கூறி அங்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது புதரில் உள்ள சுயம்புவடிவிலான சிலைமீது அந்த மாடு தன் முகத்தை வைத்து படுத்திருந்தது. இதைக்கண்டவர்கள் சுயம்புவடிவில் தோன்றியது வேங்கடவனே என உணர்ந்து அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர்.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருப்பதியில் உள்ளதுபோல நின்ற நிலையில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

வழிபாடு தொகு

இக்கோயிலில் இரண்டுகாலப் பூசை நடக்கின்றது. ஒவ்வோராண்டும் தெலுங்கு வருடப்பிறப்பின் 11 ஆம் நாளில் இருந்து நான்கு நாட்கள் திருக்கல்யாண உற்சவம், ஸ்ரீவாரி அபிசேகம், ஊஞ்சல் உற்சவம், தேர்த் திருவிழா, பல்லக்கு உற்சவம், தெப்பத் திருவிழா, சயன உற்சவம் என சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வோராண்டும் வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!". கட்டுரை. தினமலர். 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 42-44.