கோபால்ட்(II) ஆக்சலேட்டு

கோபால்ட்(II) ஆக்சலேட்டு (Cobalt(II) oxalate) என்பது CoC2O4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற எளிய {[கனிம வேதியியல்]] ஆக்சலேட்டுகளைப் போல கோபால்ட்(II) ஆக்சலேட்டும் ஓர் அணைவுப் பல்லுறுப்பியாகும். மைய உலோக அயனியான Co(OH2)2 உடன் ஆக்சலேட்டு ஈனிகள் அல்லது ஈதல் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபால்ட்டும் எண்முகிவடிவ அணைவுகளாகின்றன[1].

கோபால்ட்(II) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
814-89-1 Y
பப்கெம் 69946
பண்புகள்
CoC2O4
வாய்ப்பாட்டு எடை 146.9522 கி/மோல்
தோற்றம் சாம்பல்நிற மணிகள்
மணம் மணமற்றது
அடர்த்தி 3.01 g/cm3
உருகுநிலை 250 °C (482 °F; 523 K) (சிதைவடையும்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தூள் உலோகவியல் பயன்பாடுகளுக்குத் தேவையான கோபால்ட் வினையூக்கிகள் மற்றும் கோபால்ட்டின் உலோகத்தூள் போன்றனவற்றைத் தயாரிக்க கோபால்ட்(II) ஆக்சலேட்டு பயன்படுகிறது. இலித்தியம் அயனி மின்கலங்களின் மறுசுழற்சி செயல்முறையின் போது இது உருவாக்கப்படுகிறது. கந்தக அமிலத்துடன் கரைத்துக் கழுவி அமோனியம் ஆக்சலேட்டுடன் சேர்த்து வீழ்படிவாக்கப்பட்டு கோபால்ட் இங்கு நேர்முனைப் பொருளாகக் (LiCoO2) பெறப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Bacsa, J.; Eve, D.; Dunbar, K. R. (2005). "catena-Poly[[diaquacobalt(II)]-μ-oxalato]". Acta Cryst. C 61: m58–m60. doi:10.1107/S0108270104030409. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_ஆக்சலேட்டு&oldid=3946348" இலிருந்து மீள்விக்கப்பட்டது