கோபால்ட் பாசுப்பேட்டு
கோபால்ட் பாசுப்பேட்டு (Cobalt phosphate) என்பது Co3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கோபால்ட் ஊதா என்ற வர்த்தகமுறை பெயரால் இந்த கனிம வேதியியல் நிறமி அறியப்படுகிறது [1]. இதன் மெல்லிய படலங்கள் நீர் ஆக்சிசனேற்ற வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன [2].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கோபால்ட் ஊதா, கோபால்ட்(II) பாசுப்பேட்டு, கோபால்ட் ஆர்த்தோபாசுப்பேட்டு, ஊதா நிறமி 14
| |
இனங்காட்டிகள் | |
(tetrahydrate: 10294-50-5) 13455-36-2 (tetrahydrate: 10294-50-5) | |
ChemSpider | 55523 |
EC number | 236-655-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61615 |
| |
பண்புகள் | |
Co3(PO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 366.74231 கி/மோல் |
தோற்றம் | ஊதா நிறத்திண்மம் |
அடர்த்தி | 3.81 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,160 °C (2,120 °F; 1,430 K) |
கரையாது | |
28,110.0•10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.7 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் அமைப்பும்
தொகுகோபால்ட்(II) மற்றும் பாசுப்பேட்டு உப்புகளின் நீரிய கரைசல்களை சேர்த்து வினைபுரியச் செய்தால் திண்ம நிலை நான்குநீரேற்று CoPO4(H2O)4 வீழ்படிவாகிறது. மேலும் இதை சூடுபடுத்தினால் ஒரு நீரிலியாக மாற்றமடைகிறது. நீரற்ற CoPO4 சேர்மத்தில் Co2+ மையங்களை இணைத்துள்ள தனித்தியங்கும் பாசுப்பேட்டு (PO3−4) எதிர்மின் அயனிகள் உள்ளதாக எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறு ஒருங்கிணைவுகள் கொண்ட எண்முகம் மற்றும் ஐந்து ஒருங்கிணைவு தளங்கள் இரண்டையும் கோபால்ட்டு அயனிகள் 1:2 என்ற விகிதத்தில் ஆக்ரமிக்கின்றன [3][4]
.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hugo Müller, Wolfgang Müller, Manfred Wehner, Heike Liewald "Artists' Colors" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_143.pub2
- ↑ Matthew W. Kanan, Yogesh Surendranatha, Daniel G. Nocera (2009). "Cobalt–phosphate oxygen-evolving Compound". Chem. Soc. Rev. 38: 109-114. doi:10.1039/B802885K. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_2009-01_38_1/page/109.
- ↑ Anderson, J. B.; Kostiner, E.; Miller, M. C.; Rea, J. R. (1975). "Crystal structure of cobalt orthophosphate Co3(PO4)2". Journal of Solid State Chemistry 14: 372-7.
- ↑ Nord, A. G.; Stefanidis, T. (1983). "Structure of cobalt(II) phosphateStructure refinements of Co3(PO4)2. A Note on the Reliability of Powder Diffraction Studies". Acta Chemica Scandinavica, Series A 37: 715-p721.