கோபால் காமத்து
இந்திய அரசியல்வாதி
கோபால் அபா காமத்து (Gopal Apa Kamat) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக அறியப்படுகிறார். கோவா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார், 1967 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை சத்தாரி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதே காலத்தில் கோவா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார்.[1][2] 1990 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[3]
கோபால் காமத்து Gopal Kamat | |
---|---|
சபாநாயகர் கோவாவின் சட்டமன்றம் | |
பதவியில் 13 ஏப்ரல் 1967 – 23 மார்ச்சு 1972 | |
முன்னையவர் | பாண்டுரங் புருசோத்தம் சிரோட்கர் |
பின்னவர் | நாராயண் பர்கோ |
கோவா | |
பதவியில் 1967–1972 | |
முன்னையவர் | செய்சிங்ராவு இரானே |
பின்னவர் | பிரதாப்சிங் இரானே |
தொகுதி | சத்தாரி சட்டமன்றத் தொகுதி |
பெரும்பான்மை | 2,962 (40.04%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோபால் அபா காமத்து 22 சூலை 1917 சங்கேலிம், கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா, போர்த்துகல் பேரரசு (த்ற்பொழுது இந்தியா) |
இறப்பு | 2 மே 1990 கோவா, இந்தியா | (அகவை 72)
அரசியல் கட்சி | சுயேச்சை (1967–1972) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | குலாப் முல்காவோங்கர் |
கல்வி |
|
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Goa Legislative Assembly". www.goavidhansabha.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.
- ↑ Malhotra, G. C. (2004). Cabinet Responsibility to Legislature: Motions of Confidence and No-confidence in Lok Sabha and State Legislatures (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-200-0400-9.
- ↑ Mulgaonkar, Jayant P. (18 September 2011). "Kamat and Mulgaonkar -- close friends, colleagues and brothers-in-law". www.mail-archive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.