கோயம்புத்தூரின் புவியியல்

இந்தியாவின் தமிழிநாட்டிலுள்ள கோயம்புத்தூரின் புவியியலை விளக்குகிறது

கோயம்புத்தூர் (Coimbatore) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும் [1][2][3] தமிழ்நாட்டின் மேற்கு மூலையில், அண்டை மாநிலமான கேரளாவின் எல்லைக்கு சிறிது தொலைவில் அமைந்துள்ளது. அனைத்து பக்கங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.

பாலக்காடு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலைகள்

அமைவிடம்

தொகு

11°00′58″N 76°58′16″E / 11.0161°N 76.971°E / 11.0161; 76.971 . என்ற புவியியல் அடையாளத்தில் கோவை அமைந்துள்ளது. சென்னை நகரத்திற்கு தென் மேற்கில் 490 கிலோமீட்டர்கள் (300 மைல்) தொலைவிலும் மைசூருக்கு தெற்கே 190 கிலோமீட்டர்களும் (120 மைல்) பெங்களூருக்கு தெற்கே 330 கிலோமீட்டர்கள் (210 மைல்) தொலைவிலும் கோயம்புத்தூர் நகரம் அமைந்துள்ளது. கோயயம்புத்தூரிலிருந்து கேரளா மாநில எல்லை வெறும் 25 கிலோமீட்டர்கள் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இயற்கை அம்சங்கள்

தொகு

மேற்கு மற்றும் வடக்கில் கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. காப்புக்காடுகளும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகமும் வடக்கு பக்கத்தில் உள்ளன.[4] நொய்யல் ஆறு கோயம்புத்தூர் வழியாகச் சென்று மாநகராட்சியின் தெற்கு எல்லையாக அமைகிறது.[5][6] நகரம் நொய்யலின் படுகை பகுதிக்கு நடுவே அமைந்து ஆறு மற்றும் மழைநீராலான ஒரு விரிவான தொட்டி அமைப்பைக் கொண்டுள்ளது.[7] சிங்காநல்லூர், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வம்பதி, நரசம்பதி, கிருட்டிணாம்பதி, செல்வசிந்தாமணி மற்றும் குமாரசாமி குளங்கள் ஆகியவை கோயம்புத்தூரில் உள்ள எட்டு பெரிய குளங்கள் / சதுப்பு நிலப் பகுதிகள் ஆகும். [8] சங்கனூர் பள்ளம், கோவில்மேடு பள்ளம், விளாங்குறிச்சி-சிங்காநல்லூர் பள்ளம், கற்பேராயன் கோயில் பள்ளம், இரயில்வே சாலையோர வடிகால், திருச்சி-சிங்காநல்லூர் பள்ளம் மற்றும் சங்கனூர் பள்ளம் ஆகியவை நகரின் முக்கிய வடிகால்களாகும்.[5][9]

கோயம்புத்தூரில் உள்ள குருதி மலையில் இருந்து கௌசிகா ஆறு தொடங்குகிறது. சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறும், நொய்யல் ஆறும் கௌசிகா ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கே ஓடுகின்றன.[10]

கோவை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி நகரம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் வறண்டு காணப்படுகிறது. கேரளாவிற்குச் செல்லும் ஒரு மேற்குப் பாதை பாலக்காட்டு இடைவெளி என்று பிரபலமாக குறிப்பிடப்பட்டு இதன் எல்லையாகவும் அமைகிறது.

கோவை வனப்பிரிவு

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம் மலைகள், காடுகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் நிறைந்த பகுதியாகும். கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பவானி, நொய்யல் ஆறு, ஆழியாறு, சிறுவாணி போன்ற ஆறுகளின் தாயகமாக விளங்குகின்றன. இவை கோவை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குடிநீர் மற்றும் பாசன நீர் போன்றவற்றை வழங்குகின்றன. கோவை மாவட்டத்தின் காடுகள் 693.48 பரப்பளவில் பரவியுள்ளன. கோவையின் மொத்த பரப்பளவு  7433.72 சதுர கிலோ மீட்டர்களாகும். இம்மாவட்டத்தின் குளிர்ந்த வானிலை, பசுமையான நிலப்பரப்பு மற்றும் சுத்தமான காற்று ஆகியவற்றிற்கு இக்காடுகளே காரணமாகும். வனப் பகுதி 10°37' மற்றும் 11°31' வடக்கு அட்சரேகைகள் மற்றும் 76°39' மற்றும் 77°5' கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூர் வனக் கோட்டத்தின் பெரும்பகுதியானது தெற்கு நோக்கி நீண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. வடமேற்கு பகுதிகள் நீலகிரியின் கீழ் மலைத்தொடரை உருவாக்குகின்றன. கோயம்புத்தூர் வனப் பிரிவு நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் முக்கிய மண்டலத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

கோயம்புத்தூர் வனப்பகுதி இரண்டு வனப் பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது. பாலக்காடு இடைவெளிக்கு தெற்கே ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இது 2008 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக நியமிக்கப்பட்டது. பாலக்காட்டின் வடக்கே கோயம்புத்தூர் வனப் பிரிவு உள்ளது. . இந்தப் பிரிவு வடக்கு மற்றும் வடமேற்கில் சத்தியமங்கலம், ஈரோடு, நீலகிரி வடக்கு மற்றும் நீலகிரி தெற்கு வனப் பிரிவுகளாலும், மேற்கு மற்றும் தென்மேற்கில் கேரள மாநிலத்தின் பாலக்காடு வனப் பிரிவுகளுக்கும் எல்லையாக உள்ளது.

கோயம்புத்தூர் வனப் பிரிவானது புவியியல் மாறுபாட்டின் அடிப்படையில் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

  • நீலகிரி சரிவு காப்புக் காடுகள்
  • மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள சமவெளிக் காடுகள்
  • வெள்ளியங்காடு பள்ளத்தாக்கு
  • நாயக்கன்பாளையப் பள்ளத்தாக்கு.
  • தடாகம் பள்ளத்தாக்கு
  • போலாம்பட்டிப் பள்ளத்தாக்கு
  • வாளையார் பள்ளத்தாக்கு.

விலங்கினங்கள்

தொகு
 
உக்கடம் ஏரி

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகாமையில் இருப்பதால், இந்த மாவட்டம் விலங்கினங்கள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. கோயம்புத்தூர் நகர்ப்புற ஈரநிலங்களில் சுமார் 116 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் 66 இனன்ங்கள் இங்கேயே வசிப்பவைகளாகும். 17 பறவைகள் புலம்பெயர்ந்தவையாகவும் 33 பறவைகள் உள்ளூர் புலம்பெயர்ந்தவையாகவும் உள்ளன.[11] புள்ளி மூக்கு வாத்து, புள்ளி மூக்கு நாரை, மஞ்சள் மூக்கு நாரை போன்றவை கோயம்புத்தூர் சதுப்பு நிலங்களுக்கு அடிக்கடி வரும் சில புலம்பெயர்ந்த பறவைகளாகும்.[4]

தாவரங்கள்

தொகு

மேட்டுப்பாளையம் மலைத்தொடரின் நீலகிரி சரிவு சந்தன மரங்கள் மற்றும் மூங்கில்களால் நிறைந்துள்ளது. அவை பூனாச்சி மலைத்தொடரின் வளமான வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் முதல் தெற்குத் தொடர்களில் உள்ள புதர் காடுகள் வரை வேறுபடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான பகுதிகளைத் தவிர, பெரும்பாலான வனப் பகுதிகள் லந்தானா எனப்படும் சிரிக்கி செடிகள் நிறைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nādu - City Population - Cities, Towns & Provinces" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.
  2. "Tamil Nādu - City Population - Cities, Towns & Provinces - Statistics & Map". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
  3. "Tamil Nādu - Bill to expand madurai and kovai". Deccan Chronicle.de. Archived from the original on 10 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  4. 4.0 4.1 L. Joseph Reginald; C. Mahendran; S. Suresh Kumar; P. Pramod (December 2007). Birds of Singanallur lake, Coimbatore, Tamil Nadu. 22. பக். 2944–2948. doi:10.11609/jott.zpj.1657.2944-8. http://www.zoosprint.org/ZooPrintJournal/2007/December/2944-2948.pdf. பார்த்த நாள்: 2022-01-28. 
  5. 5.0 5.1 "Business Plan for Coimbatore Corporation" (PDF). Wilbur Smith Associates. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
  6. "Noyyal flows on like a quiet killer". Deccan Chronicle. 28 January 2011 இம் மூலத்தில் இருந்து 14 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110214013305/http://www.deccanchronicle.com/chennai/noyyal-flows-quiet-killer-080. பார்த்த நாள்: 9 May 2011. 
  7. "A river runs through it". தி இந்து. 28 January 2006 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161622/http://www.hindu.com/mp/2006/01/28/stories/2006012802630300.htm. பார்த்த நாள்: 9 May 2011. 
  8. "‘Maintenance of tanks not at cost of environment'". தி இந்து. 27 October 2010 இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927234758/http://www.hindu.com/2010/10/27/stories/2010102751810300.htm. பார்த்த நாள்: 9 May 2011. 
  9. "Corporation begins storm water drain project in Coimbatore". தி இந்து. 5 January 2011 இம் மூலத்தில் இருந்து 10 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110110231138/http://www.hindu.com/2011/01/05/stories/2011010551610300.htm. பார்த்த நாள்: 9 May 2011. 
  10. Kousikanathi.com (in தமிழ்)
  11. "CONSERVATION OF BIRD LIFE IN AN URBAN WETLAND: PROBLEMS CONCERNS — A CASE STUDY". CHEMICAL, BIOLOGICAL AND ENVIRONMENTAL ENGINEERING Proceedings of the International Conference on CBEE 2009. World Scientific Publishing Co. Archived from the original on 15 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)