கோயிசா லா கணவாய்
கோயிசா லா கணவாய் (Goecha La Pass) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலைத் தொடரில் அமைந்துள்ள ஓர் உயரமான கணவாய் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 4940 மீட்டர் அல்லது 16207 அடி உயரத்தில் இக்கணவாய் அமைந்துள்ளது.
கோயிசா லா | |
---|---|
கோயிசா லா | |
ஏற்றம் | 4,940 மீ (16,207 அடி) |
அமைவிடம் | இந்தியா |
மலைத் தொடர் | இமயமலை |
ஆள்கூறுகள் | 27°36′28″N 88°11′13″E / 27.60778°N 88.18694°E |
உலகின் மூன்றாவது மிக உயரமான சிகரமான கஞ்சன்சங்காவின் தென்கிழக்கு பக்கத்தை இங்கிருந்து காண முடியும். இந்த மலையில் ஏறத் துடிக்கும் ஆர்வலர்களுக்கு இது முக்கியத் தளமும் ஆகும். கோயிசா லாவிலிருந்து மலைக்காட்சியை முதன் முதலாக அரசாங்க அதிகாரிகள் பார்த்த போது, அதன் அழகில் வியந்து இக்காட்சியை 100 ரூபாய்த் தாளில் பிரசுரிக்க வேண்டுமென முடிவெடுத்தனர் [1].+
மலையேறுதல்
தொகுஉலகிலேயே பசுமையான பகுதிகளில் ஒன்றான கஞ்சன்சங்கா தேசிய பூங்காவின் வழியாக மலையேறுதலை இமயமலையில் விடுமுறையை கழிக்க விரும்பும் பயணிகள் பயணத்தின் முக்கிய இலக்காக திட்டமிடுவார்கள். சுற்றுச்சுழல் பாதிப்பு எதுவும் நெருங்காத இந்த காடுகளில் பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களை காணலாம். குளிர்காலத்தில் காலநிலை தெளிவாகவும், பருவமழை காலத்திற்கு முன் கற்பனைக்கு எட்டாத வகையில் மேகங்களின் அற்புதமான விளையாட்டுக்களை இங்கு காணலாம். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் இங்கு இணக்கத்துடன் ஒற்றுமையாக பராமரிக்கப்படுகிறது. எந்தவொரு ஒற்றை மரமும் தனித்து நிற்பதாக உணரப்படுவதில்லை. ஒரு நாளைக்கு கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதால் மலையேறுதலே இங்கு சவாலானது ஆகும். இத்தகைய மலையேற்றத்தின் போது ஒருவர் தட்ப வெப்ப நிலைக்குத் தக்கவாறு முறையாகத் தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் சிறிய நேரப் பயணத்திலேயே அதிக உயர மாற்றங்களை கடக்கும் சூழ்நிலை ஏற்படும். இப்பகுதியின் புகழுக்கு இதுவும் ஒரு காரணமாகும். இருப்பினும் இங்கு நடக்கத் தொடங்கிவிட்டால் சவாலான தூரங்களை சமாளிப்பது எளிதாகிவிடும்.
திசோங்கரி உச்சியிலிருந்து தான்சிங்கு கோயிசாலா மலையேற்றத்தில் காணும் மலை உச்சிகளின் பட்டியல் [2]
- கஞ்சன் ஜங்கா || 8586 மீட்டர்,
- தலங்கு ( 7349 மீட்டர் ),
- ரதோங்கு ( 6679 மீட்டர் ),
- கப்ரூ வடக்கு ( 7353 மீட்டர் ),
- கோக்டேங்கு ( 6147 மீட்டர் ),
- சிம்வோ ( 6812 மீட்டர் ),
- கப்ரூ தெற்கு ( 7318 மீ ),
- கப்ரூ கூரை ( 6600 மீட்டர் ),
- கப்ரூ கிளை ( 6100 மீட்டர் ),
- பாண்டிம் ( 6691மீட்டர் ),
- தென்செங்காங்கு ( 6010மீட்டர் ),
- யுப்போனோ ( 5650 மீட்டர் )
அடிப்படைப் பயணத்திட்டம்:
- சிலிகுரியிலிருந்து யுக்சோம்
- யுக்சோமிலிருந்து சாச்சென் (10 கி.மீ உயர நடைப் பயணம்)
- சாச்சென்னிலிருந்து டிசோக்கா (7 கி.மீ உயர நடைப் பயணம்)
- டிசோக்காவிலிருந்து திசோங்கரி (10 கி.மீ உயர நடைப்பயணம்)
- திசோங்கரி லா கணவாயில் ஓய்வும் நடைப்பயணமும் (4417 மீட்டர்)
- திசோங்கரியிலிருந்து தாசிங்கு (10 கி.மீ நடைப்பயணம்)
- தாசிங்குவிலிருந்து கோயிசாலா கணவாய்க்கு சென்று திரும்புதல் (14 கி.மீ உயர நடைப்பயணம்)
- தாசிங்குவிலிருந்து டிசோக்கா(16 கி.மீ உயர நடைப்பயணம்)
- டிசோக்காவிலிருந்து யுக்சோம் (17 கி.மீ உயர நடைப்பயணம்)
- சிலிகுரி திரும்புதல்
திரைப்படம்
தொகு- இமயமலையில் சிங்கலீலா http://theindia.info/SingaliLaInTheHimalaya பரணிடப்பட்டது 2019-05-06 at the வந்தவழி இயந்திரம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சிங்கலீலா மலை உச்சியை அடையும் 14 நாள் மலையேற்றத்தைப்பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.
- கோயிசாலா:கஞ்சன் சங்காவைத் தேடி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dzongri and Goecha La trek in Sikkim". Archived from the original on 2019-02-07.
- ↑ "Goechala Trek - Sikkim - East Himalayas".