கோரி கங்கா ஆறு
உத்தராகண்ட மாநிலத்தில் ஓடும் ஆறாகும்
கோரி கங்கா அல்லது கோரி காட் (Gori Ganga also Gori Gad) என அழைக்கப்படும் இந்த ஆறு உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள பிதொரோகர் என்னும் மாவட்டத்தில் உள்ள முன்சியரி வட்டத்தில் பாய்கிறது. இது ஐந்து கொடுமுடிகள் கொண்ட பஞ்சசூலி எனும் பனிமலையில் இருந்து உற்பத்தியாகிறது.[1] மிலாம் பனிப்பாறை, நந்தா தேவியின் வடகிழக்கில் உள்ள ரலாம் நதியின் பனிப்பாறைகள் மற்றும் பஞ்சசூலி சிகரங்களின் மேற்கு முகத்தில் அமைந்துள்ள பியூன்ஷானி மற்றும் உத்தரி & தக்ஷினி பலாட்டி பனிப்பாறைகள் இதன் முக்கிய ஆதாரங்களாகும்.
பெயர் காரணம்
தொகுஉள்ளூர் மொழியில் "கோரி" என்றால் வெள்ளை அல்லது சிகப்பு. "காட்" மற்றும் "கங்கை" இரண்டும் ஆற்றைக் குறிக்கும். இந்த ஆற்றின் நீர் நுரைத்து, வெள்ளை களிமண்/மணலைக் கொண்டிருப்பதால், அது பெரும்பாலும் வெண்மையாகவே காட்சியளிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Garhwal-Himalaya-Ost, 1:150,000 scale topographic map, prepared in 1992 by Ernst Huber for the Swiss Foundation for Alpine Research, based on maps of the Survey of India.