கோல்டு வின்னர்
கோல்ட் வின்னர்(ஆங்கில மொழி: Gold winner) என்பது காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் எண்ணெய் வகைகளின் அடையாளப் பெயராகும். நிலக்கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பார்ம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வனஸ்பதி, சோயாபீன் எண்ணெய் எனப் பல்வேறு எண்ணெய் வகைகள் கோல்டு வின்னர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.[1] இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புருனே, குவைத், யுஏஇ, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சந்தைகளைக் கொண்டுள்ளது.
வரலாறு
தொகு1970 களில் ஜி. முனுசாமி நாடார் தொடங்கிய ஒரு சிறிய மளிகைக் கடையுடன் இதன் வரலாறு தொடங்குகிறது. பின்னர் 1993 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகிலுள்ள காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்கி பெரிய நிறுவனமாக விரிவுபடுதினார்.[2] 2005 ஆம் ஆண்டில், இது HACCP (Hazard Analysis Critical Control Points) சான்றிதழைப் பெற்றுள்ளது, இந்தச் சான்றிதழ்படி இதன் எண்ணெயில் நச்சு, வேதியியல் அல்லது உயிரியல் மாசு இல்லை என்றும் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் சான்றளிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே வேங்கைவாசலில் உள்ள இதன் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைக்கு டி.யு.வி. மேலாண்மை சேவைகள் நிறுவனம் 2000: ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழ் அளித்துள்ளது. [3] 2007 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் அமெரிக்க கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் சுத்திகரிப்பு ஆலோசகர் ராபர்ட் எம். பியர்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆலோசகர் தற்போதைய தயாரிப்பை மேம்படுத்துவதற்கும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் யோசனைகளை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [4]
பொருட்கள்
தொகு'கோல்டு வின்னர் சூரியகாந்தி எண்ணெய்', 'கோல்டு வின்னர் கடலை எண்ணெய்', 'கோல்டு வின்னர் விடா டி3+' - வைட்டமின் டி3+ சத்து நிறைந்த சமையல் எண்ணெய்,[5] 'கோல்டு வின்னர் வனஸ்பதி' - நெய்க்கு மாற்றாகப் பயன்படும் சைவ எண்ணெய் போன்றவை இதன் முக்கியத் தயாரிப்புகளாகும்.
வருமானவரி சோதனை
தொகு2017 மே 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடந்த வருமான வரித்துறையினர் சோதனையை அடுத்து 90 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்தனர். இதையடுத்து வருமான வரித்துறை விதிமுறைகளின்படி 107 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.[6]
குறிப்புகள்
தொகு- ↑ "கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்தின் முத்திரையை பயன்படுத்த 9 நிறுவனங்களுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு". www.dinakaran.com. Archived from the original on 2019-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ India's New Capitalists: Caste, Business, and Industry in a Modern Nation. 16 September 2008.
- ↑ "Gold winner gets quality certification, Virudhunagar". The Hindu Business Line. 6 September 2005. http://www.blonnet.com/2005/09/06/stories/2005090600340800.htm.
- ↑ "Gold Winner ties up with U.S. consultant". The Hindu. 14 April 2007 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070611153718/http://www.hindu.com/2007/04/14/stories/2007041404751703.htm.
- ↑ "கோல்டு வின்னர் விடா டி3+ சமையல் எண்ணெய் அறிமுகம்". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/business/210718-3.html. பார்த்த நாள்: 1 November 2019.
- ↑ "ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்த கோல்டு வின்னர் கம்பெனி : 107% அபராதம் விதித்த வருமான வரித் துறை!!!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.