கோல்பரிய லோகோகீத்

கோல்பரியா லோகோகீத் (ஆங்கிலம்: Goalpariya Lokogeet; அசாமிய மொழி: গোৱালপাীয়া লোকগীত) என்பது பாரம்பரிய பாடல் வரிகளில் பாடப்படும் கோல்பாராவின் நாட்டுப்புற இசை. இது கோல்பரிய மொழி பேசும் மக்களால் பாடப்படுகிறது. இதுவரை அறியப்படாத இந்த இசை வகையை இந்தியாவில் தேசிய அளவில் அறியத்தக்கவகையில் முதன்மைப் படுத்தியவர் பிரதிமா பருவா பாண்டே ஆவார். இந்த இசை வகையை கோச் ராஜ்போங்ஷி சமூகத்தினர் தங்கள் இசை விழாக்களில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். தற்போது, கோல்பரியா பாடல்களின் இசைத்தொகுப்புகள் வணிக ரீதியாக வெளியிடப்படுகின்றன. கோல்பரியா இசைக் கருவிகள் இந்தியாவில் பிரபலமான இசையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பினா தாசு போர்தாகூர், மினி பட்டாச்சார்யா, நஸ்முல் ஹூக், அல்லாவுதீன் சர்க்கார், அமிதா சர்க்கார், அப்துல் ஜாபர், ரகிமா பேகம் கலிதா, அயன் அனிசுர் போன்ற சில குறிப்பிடத்தக்கப் பாடகர்கள் ஆவர்.

மாறுபாடுகள்

தொகு

கோல்பரியா லோக்கீத் என்பது மதம் அல்லது சடங்குகளுடன் தொடர்புப்படுத்தப்படாத கோல்பராவின் பாடல் வரிகளைக் குறிக்கிறது. அன்பு என்பது இந்த பாடல்களின் முதன்மைக் கருப்பொருள். ஆனால் பிரத்தியேகமாக இல்லை. இந்த இசையில் பல்வேறு துணை வகைகள் உள்ள. இவை இசையின் போக்கு மற்றும் கருப்பொருள்களில் வேறுபடுகின்றன. இவற்றில் மொய்ஷாலி மற்றும் மவுட் பாடல்களைத் தவிர பவையா மற்றும் சட்கா ஆகியவை முக்கிய வடிவங்கள். இந்த பாடல்கள் பெரும்பாலும் கூட்டாகப் பின்னணியில் பாடப்படுகின்றன. ஆனால் இவை டோடோராவின் ஒரே துணையுடன் பாடப்படும் தனிப்பாடல்களுக்கும் ஏற்றது.

இவை காதல் மற்றும் ஏக்கத்தின் பாடல்கள். சமசுகிருத வார்த்தையான பாவாவில் வேரூன்றிய பெயர்.[1] இவை தீவிரத்தன்மையில் தெளிவானவையாக உள்ளன.ref>(Dutta 1995, ப. 176)</ref> பாவையா பாடல்களில் மென்மையான காதலுடன் கூடியன. இப்பாடல்கள் கணவன் அல்லது காதலனுக்கான ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன[2]

சட்கா

தொகு

சட்கா பாடல்கள், பவாயாவிற்கு மாறாக, காதலை மட்டும் கருப்பொருளாகக் கொண்டவை அல்ல. மேலும் வெளிப்படையான தீவிரத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இவை நேரடியாகவும், வளைந்துகொடுக்கும் தன்மையில் சாதாரணமாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் தேவர்-பவுஜி உறவு, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சூழ்நிலைகளைச் சித்தரிக்கின்றன.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. (Dutta 1995, ப. 177)
  2. (Dutta 1995, ப. 177–179)
  3. (Dutta 1995, ப. 179–183)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்பரிய_லோகோகீத்&oldid=3657747" இலிருந்து மீள்விக்கப்பட்டது