பிரதிமா பரூவா பாண்டே

பிரதிமா பருவா பாண்டே (Pratima Barua Pandey) (பிறப்பு:1934 அக்டோபர் 3 - இறப்பு: 2002 டிசம்பர் 27) இவர் மேற்கு அசாமின் துப்ரி மாவட்டத்தில் கௌரிபூரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார். தேசிய விருது பெற்ற பருவா பாண்டே, கோல்பரியா பாடல்களுக்கு மிகவும் பிரபலமானவர். இவரது இசைப் பணிகளுக்காக இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாதமி விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. இவரது ஆத்மாவைத் தூண்டும் பாடல்களான "ஹஸ்தீர் கன்யா" மற்றும் "ஓ முர் மஹுத் பந்து ரீ" ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவர். இவர் பிரகிருசு சந்திரா பருவா என்பவரின் (லால்ஜி) மகள் ஆவார். தேவதாஸ் திரைப்படத் தயாரிப்பாளர் பிரமாதேஷ் பருவாவின் மருமகளாவார்.

பிரதிமா பரூவா பாண்டே
பிறப்பு3 அக்டோபர் 1934
கொல்கத்தா
இறப்பு27 திசம்பர் 2002 (அகவை 68)
அசாம்
பாணிநாட்டார் பாடல்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பருவா பாண்டே 1934 அக்டோபர் 3 அன்று கல்கத்தாவில் பிறந்தார் . [1] இவர் தனது ஆரம்பக் கல்வியை நகரத்தின் கோகலே நினைவுப் பள்ளியில் பயின்றார். அதன் பிறகு இவர் அசாமுக்கு அரச குடும்பத்தின் இல்லமான கௌரிபூரில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கச் சென்றார். இவர் பெரும்பாலும் தனது ஆரம்ப ஆண்டுகளை கல்கத்தாவின் தின் மற்றும் கௌரிபூரில் உள்ள "கடதர்" நதிக்கரையின் இனிமையான சூழல்களுக்கு இடையில் கழித்தார். இவர் பள்ளியில் ரவீந்திரசங்கீதத்தை கற்றுக்கொண்டார். ஆனால் இவரது தந்தை பிரகிருதேஷ் சந்திரா பருவா (லால்ஜி) அவர்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தவிர வேறு எந்த முறையான பயிற்சியையும் இசையில் இவர் ஒருபோதும் எடுக்கவில்லை.

சொந்த வாழ்க்கை

தொகு

கௌரிபூர் பி. பி கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் கங்கா சங்கர் பாண்டே என்பவரை மணந்தார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

கோல்பாரியா லோககீதத்தை பிரபலப்படுத்துவதில் இவரது முன்னோடி முயற்சிகளுக்காக பிரதிமா பாருவா பாண்டேவுக்கு பத்மசிறீ [2] மற்றும் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது .

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பிரபின் கசாரிகா இயந்ந்றிய "கசுதீர் கன்யா" என்ற இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளைப் பற்றிய ஒரு ஆவணப்படம் 1997 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. மேலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இத்திரைப்படம் 1998 இல் தெற்காசிய திரைப்பட விழாவில் அலைகளை உருவாக்கியது. [3]

இறப்பு

தொகு

பிரதிமா பரூவா பாண்டே 2002 திசம்பர் 12 அன்று இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கௌரிபூரில் தனது 68 வயதில் இறந்தார். [4]


குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2012-10-31. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  3. "Biopic on noted Assamese folk singer Pratima Barua-Pandey". பிசினஸ் ஸ்டாண்டர்ட். Press Trust of India (New Delhi). 22 November 2015. http://www.business-standard.com/article/pti-stories/biopic-on-noted-assamese-folk-singer-pratima-barua-pandey-115112200367_1.html. பார்த்த நாள்: 4 January 2016. 
  4. https://www.celebrityborn.com/biography/pratima-barua-pandey/13831
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிமா_பரூவா_பாண்டே&oldid=3563469" இலிருந்து மீள்விக்கப்பட்டது