கோவர்தன்
கோவர்தன் (Govardhan), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மதுரா நகரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும், பிருந்தாவனத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] கோவர்தன மலையில் கிருஷ்ணரின் கோயில் உள்ளது.[2][3] இது கடல்மட்டத்திலிருந்து 179 மீட்டர் (587 அடி) உயரத்தில் உள்ளது. இங்கு கோவர்தன மலை அமைந்துள்ளது. இது இந்துப் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்துக்கள் இங்குள்ள புனித கோவர்தன மலையை வலம் வந்து கோவர்தனன் பூஜை செய்கின்றனர்.
கோவர்தன் | |
---|---|
ஆள்கூறுகள்: 27°30′N 77°28′E / 27.5°N 77.47°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மதுரா |
வருவாய் வட்டம் | கோவர்தன் |
ஏற்றம் | 179 m (587 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 22,576 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• Native | விரஜ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 281502 |
வாகனப் பதிவு | UP-85 |
கோவர்தன மலை
தொகுகிருஷ்ணர்-ராதையில் குடிகொண்டுள்ள கோவர்தன மலையை 21 கிலோ மீட்டர் வலம் வந்து பக்தர்கள் கோவர்தனன் பூஜை செய்வது வழக்கம். கோவரதன மலைப் பகுதியில் குசும குளம், ஹரிதேவ் கோயில் உள்ளது.
தொன்ம வரலாறு
தொகுஇந்து தொன்மவியலில் கிருஷ்ணர் இளம் பருவத்தில் விளையாடியதாக கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்திரன் கோபம் கொண்டு பொழிவித்த பெரும் மழையால் துயரம் கொண்ட யாதவர்களையும் மற்றும் கால்நடைகளையும் இப்பகுதியில் உள்ள கோவர்தன மலையை, கிருஷ்ணர் குடையாகத் தூக்கிப் பிடித்து காத்தமையால் கிருஷ்ணருக்கு கோவர்தனன் எனப்பெயராயிற்று.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14 வார்டுகளும், 3,910 வீடுகளும் கொண்ட கோவர்தன் பேரூராட்சியின் மக்கள் தொகை 22,576 ஆகும். அதில் ஆண்கள் 12,114 மற்றும் பெண்கள் 10,462 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,975 மற்றும் 7 ஆகவுள்ளனர். இந்துக்கள் 93.19%, இசுலாமியர் 5.9%, சமணர்கள் 0.43% மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர். [5]
படக்காட்சியகம்
தொகு-
கோவர்தன மலையில் கோவர்தனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்
-
மானச கங்கை, கோவர்தன்
-
கோவர்தனருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்]
-
பூக்கள் ஏரி, கோவர்தன்
-
பூக்கள் ஏரி, 2017, கோவர்தன்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Vrindavan to Radha Kund". Google mpas. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
- ↑ David L. Haberman, River of Love in an Age of Pollution: The Yamuna River of Northern India, Page 264 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-24789-2
- ↑ Kapila D. Silva; Neel Kamal Chapagain (2013). Asian Heritage Management: Contexts, Concerns, and Prospects. Routledge. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-52054-6.
- ↑ Amit Sengupta (16 June 2015). "Spiritual Soujourn (sic) in Govardhan". http://www.moneylife.in/article/spiritual-soujourn-in-govardhan/42258.html.
- ↑ Govardhan Population, Religion, Caste, Working Data Mathura, Uttar Pradesh - Census 2011
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Govardhan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Goverdhan Parikrama highlights