கோவிந்த் மோகன்
கோவிந்த் மோகன் (Govind Mohan)(பிறப்பு செப்டம்பர் 21,1965) என்பவர் இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 1989-ஆம் ஆண்டு தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் 23 ஆகத்து 2024 முதல் இந்தியாவின் உள்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[2][3][4][5][6]
கோவிந்த் மோகன் | |
---|---|
இந்திய உள்துறை செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 ஆகத்து 2024 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
முன்னையவர் | அஜய் குமார் பல்லா |
செயலர், கலாச்சார அமைச்சகம் | |
பதவியில் 1 அக்டோபர் 2021 – 22 ஆகத்து 2024 | |
முன்னையவர் | இரகுவேந்திர சிங் |
பின்னவர் | அருணிசு சாவ்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 செப்டம்பர் 1965[1] உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | புனித ஜோசப் கல்லூரி, நைனிதால் புனித பிரான்சிசு கல்லூரி |
முன்னாள் கல்லூரி | பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் |
வேலை | ஆட்சிப்பணி அதிகாரி |
இளமை
தொகுமோகன் 1965 செப்டம்பர் 21 அன்று உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். இவரது தந்தை பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார்.[3]
கல்வி
தொகுமோகன் தனது ஆரம்பக் கல்வியை உத்தராகண்டு தூய ஜோசப் கல்லூரி, புனித பிரான்சிசு கல்லூரியிலும் முடித்து, மார்ச் 1982-ல் பட்டம் பெற்றார்.[7]
மோகன் சூலை 1982 முதல் மார்ச் 1986 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் மோகன் சூலை 1986 முதல் மார்ச் 1988 வரை அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேலாண்மையில் முதுநிலை பட்டயப்படிப்பினை முடித்து பட்டம் பெற்றார்.[8][7]
தொழில்
தொகுமோகன் இதற்கு முன்பு இந்திய அரசில் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர்/கூடுதல் செயலாளராகவும், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இணைச் செயலாளராகவும் இருந்தார்.
ஒன்றியப் பிரதேசங்களின் கோட்டத் தலைவராகப் பணியாற்றிய இவர், சிக்கிம் அரசின் முதன்மை குடியிருப்பு ஆணையராகவும் இருந்துள்ளார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Civil List of IAS Officers". easy.nic.in.
- ↑ "Shri Govind Mohan, IAS(SK:89),Officer on Special Duty (OSD), MHA.- Ministry of Home Affairs" (PDF) (in english). mha.gov.in.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 "कौन हैं 1989 बैच के IAS गोविंद मोहन, जिन्हें बनाया गया नया गृह सचिव" (in Hindi). https://www.aajtak.in/india/news/story/who-is-1989-batch-ias-govind-mohan-who-has-been-made-the-new-union-home-secretary-ntc-2011020-2024-08-15.
- ↑ "Centre appoints Govind Mohan as Union home secretary" (in english). Hindustan Times.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Govind Mohan Home Secretary: 1989 बैच के सीनियर IAS अधिकारी गोविंद मोहन होंगे नये केंद्रीय गृह सचिव" (in Hindi). Dainik Jagran.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Who is Govind Mohan who takes over a charge of Union home secretary" (in english). jansatta.com.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 7.0 7.1 7.2 "Govind Mohan, 1989-batch IAS officer, appointed new Home Secretary" (in English). India Today.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "यूपी के रहने वाले इस IAS अधिकारी को मिली बड़ी जिम्मेदारी, आज संभालेंगे देश के गृह सचिव का पद" (in Hindi). abplive.com. https://www.abplive.com/states/up-uk/senior-ias-officer-govind-mohan-take-charge-union-home-secretary-home-town-up-2766621.