இந்திய உள்துறை செயலாளர்

இந்திய உள்துறை செயலாளர் (Home Secretary (India)) என்பவர் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராக உள்ளார். இந்தப் பதவியை இந்திய அரசின் செயலாளர் பதவியில் உள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் வகிக்கிறார். தற்போதைய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் உள்ளார். மத்திய சேமக் காவல் படை, மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய காவல்துறை அமைப்புகள் உட்பட அனைத்து மத்தியப் படைகளும் மத்திய உள்துறை செயலாளரின் கீழ் உள்ளன.

உள்துறை செயலாளர்
Gṛh Saciv
Emblem of India
தற்போது
கோவிந்த் மோகன், இந்திய ஆட்சிப் பணி

23 ஆகத்து 2024 முதல்
உள்துறை அமைச்சகம் (இந்தியா)
உறுப்பினர்தேசிய பாதுகாப்பு மன்றம் (இந்தியா)
நிர்வாகச் செயலாளர்கள் குழு
அறிக்கைகள்
வாழுமிடம்3, புதிய மோதி பாக், புது தில்லி[1]
அலுவலகம்உள்துறை அமைச்சகம்
தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி
இரைசினாக் குன்று
புது தில்லி
நியமிப்பவர்நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
பதவிக் காலம்2 ஆண்டுகள் (நீடிப்பிற்கு உட்பட்டது)[2][3][4]
உருவாக்கம்1947; 77 ஆண்டுகளுக்கு முன்னர் (1947)
ஊதியம்2,25,000 (US$2,800) மாதந்தோறும்[5][6]
இணையதளம்Official Website

இந்திய அரசின் செயலாளராக, உள்துறை செயலாளர் இந்திய முன்னுரிமையில் 23வது இடத்தில் உள்ளார்.[7][8][9][10]

அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் பதவிகள்

தொகு

உள்துறை செயலாளர் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராகவும், உள்துறை அமைச்சகத்திற்குள் கொள்கை மற்றும் நிர்வாகத்தின் அனைத்து விடயங்களிலும் உள்துறை அமைச்சரின் முதன்மை ஆலோசகராகவும் உள்ளார்.[11]

உள்துறை செயலாளரின் பணி பின்வருமாறு:

  • உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுதல். இது தொடர்பான பொறுப்பு முழுமையானது மற்றும் பங்கிடப்படாதது.[12]
  • கொள்கை மற்றும் நிர்வாக விவகாரங்களின் அனைத்து அம்சங்களிலும் உள்துறை அமைச்சரின் தலைமை ஆலோசகராகச் செயல்படுதல்.[12]
  • இந்திய நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு முன் உள்துறை அமைச்சகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.[12]
  • உள்துறை அமைச்சகத்தின் சமச் செயலாளர்களில் முதல் நபராகச் செயல்படுதல்.

ஊதியம், தங்குமிடம் மற்றும் சலுகைகள்

தொகு

உள்துறை செயலாளர் இராஜதந்திர கடவுச் சீட்டு பெறத் தகுதியானவர். மத்திய உள்துறை செயலாளரின் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இல்லம் 3, நியூ மோதி பாக், புது தில்லி, ஒரு வகை-VIII ஓரடுக்கு மனை ஆகும்.

உள்துறை செயலாளர் இந்திய அரசின் செயலாளர் பதவியில் இருப்பதால், இவரது சம்பளம் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும், படைத்தளபதி மற்றும் அதற்குச் சமமான பதவிகளில் உள்ள இராணுவத் தளபதி/தளபதிகளுக்கும் சமமானதாகும்.[13][13]

உள்துறை செயலாளரின் மாதாந்திர ஊதியம் மற்றும் படிகள்
7வது ஊதியக்குழு அடிப்படை ஊதியம் (மாதத்திற்கு) ஊதியம் மேட்ரிக்ஸ் நிலை ஆதாரங்கள்
2,25,000 (US$2,800) ஊதிய நிலை 17 [5]

உள்துறை செயலாளர்களின் பட்டியல்

தொகு
பெயர் பதவியேற்ற்ற நாள் பதவி முடிவுற்ற நாள் ரெஃப்.
கோவிந்த் மோகன் 23 ஆகத்து 2024 பதவியில் [14]
அஜய் குமார் பல்லா 22 ஆகத்து 2019 22 ஆகத்து 2024 [15][16]
ராஜீவ் கௌபா 31 ஆகத்து 2017 22 ஆகத்து 2019 [17]
ராஜீவ் மெஹ்ரிஷி 31 ஆகத்து 2015 30 ஆகத்து 2017 [18]
எல். சி. கோயல் 5 பிப்ரவரி 2015 31 ஆகத்து 2015 [19]
அனில் கோஸ்வாமி 30 சூன் 2013 4 பிப்ரவரி 2015 [20]
ஆர். கே. சிங் 30 சூன் 2011 30 சூன் 2013 [21]
கோபால கிருஷ்ண பிள்ளை 30 சூன் 2009 30 சூன் 2011 [22]
மதுகர் குப்தா 31 மார்ச் 2007 30 சூன் 2009
வினோத் குமார் துக்கல் 31 மார்ச் 2005 31 மார்ச் 2007
திரேந்திரா சிங் 1 சூலை 2004 31 மார்ச் 2005 [23]
அனில் பைஜால் 8 பிப்ரவரி 2004 1 சூலை 2004
என். கோபாலசுவாமி 15 அக்டோபர் 2002 8 பிப்ரவரி 2004
கமல் பாண்டே 5 மே 1999 15 அக்டோபர் 2002
பால்மிகி பிரசாத் சிங் 1 நவம்பர் 1997 4 மே 1999
கே. பத்மநாபையா சூன் 1,1994 31 அக்டோபர் 1997
என். என். வோரா 6 ஏப்ரல் 1993 31 மே 1994
மாதவ் கோட்போலே 4 அக்டோபர் 1991 23 மார்ச் 1993
ஆர். கே. பார்கவா திசம்பர் 12,1990 3 அக்டோபர் 1991
நரேஷ் சந்திரா 21 மார்ச் 1990 11 திசம்பர் 1990
ஷிரோமணி ஷர்மா 29 திசம்பர் 1989 20 மார்ச் 1990
ஜே. ஏ. கல்யாணகிருஷ்ணன் 17 அக்டோபர் 1988 29 திசம்பர் 1989
சி. ஜி. சோமியா 1 சூலை 1986 16 அக்டோபர் 1988
ஆர். டி. பிரதான் 15 சனவரி 1985 30 சூன் 1986
பிரேம் குமார் 6 நவம்பர் 1984 15 ஜனவரி 1985
எம். எம். கே. வாலி 1 மார்ச் 1984 4 நவம்பர் 1984
டி. என். சதுர்வேதி 12 ஆகத்து 1981 29 பிப்ரவரி 1984
எஸ். எம். எச். பர்னி 29 பிப்ரவரி 1980 12 ஆகஸ்ட் 1981
டி. சி. ஏ. ஸ்ரீநிவாஸவரதன் 31 மார்ச் 1977 29 பிப்ரவரி 1980
எஸ். எல். குரானா 23 சூன் 1975 30 மார்ச் 1977
நிர்மல் குமார் முகர்ஜி 4 சூலை 1973 23 சூன் 1975
கோவிந்த் நரேன் சனவரி 1,1971 18 மே 1973
எல். பி. சிங் 18 செப்டம்பர் 1964 சனவரி 1,1971
வி. விஸ்வநாதன் 27 நவம்பர் 1961 18 செப்டம்பர் 1964
பி. என். ஜா 15 சனவரி 1958 26 நவம்பர் 1961
ஏ. வி. பாய் மார்ச் 1,1953 சனவரி 14,1958
எச். வி. ஆர். அய்யங்கார் ஆகஸ்ட் 1,1948 பிப்ரவரி 28,1953
ஆர். என். பானர்ஜி 5 மே 1947 2 சூலை 1948

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Vijaita (September 16, 2015). "Home Secretary gives the miss to fortified bungalow". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் October 6, 2017.
  2. Khare, Harish (February 8, 2005). "Fixed tenure planned for Home, Defence Secretaries". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் January 10, 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Fixed tenure for defence, home secretaries". ரெடிப்.காம். September 22, 2005. பார்க்கப்பட்ட நாள் January 10, 2017.
  4. "Fixed tenure for Defence, Home Secretaries". அவுட்லுக் (இதழ்). September 22, 2005. பார்க்கப்பட்ட நாள் January 17, 2018.
  5. 5.0 5.1 "Report of the 7th Central Pay Commission of India" (PDF). Seventh Central Pay Commission, Government of India. Archived from the original (PDF) on November 20, 2015. பார்க்கப்பட்ட நாள் August 13, 2017.
  6. Biswas, Shreya, ed. (June 29, 2016). "7th Pay Commission cleared: What is the Pay Commission? How does it affect salaries?". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் September 24, 2017.
  7. "Order of Precedence" (PDF). Rajya Sabha. President's Secretariat. July 26, 1979. Archived from the original (PDF) on July 4, 2014. பார்க்கப்பட்ட நாள் September 24, 2017.
  8. "Table of Precedence" (PDF). Ministry of Home Affairs, Government of India. President's Secretariat. July 26, 1979. Archived from the original (PDF) on May 27, 2014. பார்க்கப்பட்ட நாள் September 24, 2017.
  9. "Table of Precedence". Ministry of Home Affairs, Government of India. President's Secretariat. Archived from the original on April 28, 2014. பார்க்கப்பட்ட நாள் September 24, 2017.
  10. Maheshwari, S.R. (2000). Indian Administration (6th Edition). New Delhi: Orient Blackswan Private Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125019886.
  11. "Central Secretariat Manual of Office Procedure - 14th Edition (2015)" (PDF). Ministry of Personnel, Public Grievances and Pension. p. 6. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
  12. 12.0 12.1 12.2 Laxmikanth, M. (2014). Governance in India (2nd Edition). Noida: McGraw Hill Education. pp. 3.1–3.10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9339204785.
  13. 13.0 13.1 "Army Pay Rules, 2017" (PDF). Ministry of Defence, Government of India. May 3, 2017. பார்க்கப்பட்ட நாள் September 24, 2017.
  14. "Govind Mohan next Home Secretary, takes over from Bhalla; more key postings expected". The Indian Express (in ஆங்கிலம்). 2024-08-14. பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  15. "Shri Ajay Kumar Bhalla I.A.S. (AM:1984) taking charge as Union Home Secretary, from Shri Rajiv Gauba I.A.S. (JH:1982)" (Tweet). 22 August 2019. Missing or empty |user= (help); Missing or empty |number= (help)
  16. "ajay-bhalla-to-be-new-home-secretary". https://www.thehindu.com/news/national/ajay-bhalla-to-be-new-home-secretary/article28701546.ece/amp/. 
  17. "Shri Rajiv Gauba takes over as Union Home Secretary". 31 August 2017.
  18. "Rajiv Mehrishi takes over as Home Secretary". 31 August 2015.
  19. "L.C. Goyal takes over as Home Secretary". 5 February 2015.
  20. "Anil Goswami takes charge as new Home Secretary". 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
  21. "Rajkumar Singh to be new Home Secretary". 2011-06-24.
  22. "G S Pillai new home secretary". 2009-06-12. http://timesofindia.indiatimes.com/india/G-S-Pillai-new-home-secretary/articleshow/4646049.cms. 
  23. "Dhirendra Singh takes over as Home Secretary". 2004-07-01.

நூலியல்

தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உள்துறை_செயலாளர்&oldid=4174950" இலிருந்து மீள்விக்கப்பட்டது